Friday, August 14, 2015

காரியம் மாறுதலாய் முடிந்தது!! - நம் நாட்டை ஆசீர்வதிக்க!


 
வேதத்தில் எஸ்தரின் புத்தகம் முழுவதிலும் இறைவனின் பெயர் வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ஆனால் உள்ளார்ந்தமாக அவரின் வல்ல செயல்கள் புத்தகம் முழுமையும் நிறைந்துள்ளன. இதை விளக்க நான் எடுத்துள்ள முயற்சியானது இறை ஞானம் செரிந்த‌ தங்கப் புதையல் போன்ற இப்புத்தகத்தில் ஒரு சிறிய கண்ணோட்டமாகும். நம்மில் அதிகமானோர் அறிந்துள்ள இக்கதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் பதிவாயுள்ளன. அதில் ஒருவர் கதையின் கடைசி காட்சிகளின் போது உயிருடன் இல்லை. அந்த நபரைத் தான் நாம் முதலில் காண வேண்டும். ஏனென்றால் அந்நபர் தான் இக்கதைக்கு சுவாரஸ்யத்திற்குக் காரணர்.

பிரச்சனையான ஆமான்
வெளிப்படையாக ஆமான் கொண்டு வந்த பிரச்சனை அரண்மனை வாசல் காத்த மொர்தெகாய் மீது போன்று தோன்றினாலும் உள்ளார்ந்தமாக ஒரு நாட்டினர் மீதும், யூதர் என்னும் பெருவாரியான‌ மக்கள் கூட்டம் மீதுமாகும் (3: 5-6, 4:1-3)  இன்றும் நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் ஆகும்(எபேசியர் 6:12). இம்மாதத்தில் நாம் நம் தேசம் அந்நிய ஆளுநர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற நாளை கொண்டாடுகிறோம். இன்று நாம் உண்மையாகவே விடுதலைப் பெற்றிருக்கிறோமோ என்பது கேள்விக்குறியாயிருக்கிறது. பெரும்பான்மை மதப்பிரிவினர் சிலரிடமிருந்து கிறிஸ்தவருக்குப் பிரச்சனகள் அதிகம் எழும்பிக்கொண்டிருக்கிறது. பவுலைப் போல நம் விசுவாசத்திற்கான நல்ல போராட்டத்தைப் போராட ஆயத்தமாயிருக்கிறோமா? கிறிஸ்தவருக்கு எதிரான ஆமானின் சதித் திட்டங்களை நாம் எவ்வாறு மேற்கொள்ளப்போகிறோம்?

திறமையான மொர்தெகாய்
யூதருக்கு விடுதலைப் பெற்றுத் தரக்கூடியத் திறன் மொர்தெகாயிடமிருந்தது. எஸ்தருக்கு ஏற்ற சமயத்தில்  அவன் கொடுத்த ஆலோசனை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானமாயிருந்தது (நீதிமொழிகள் 25:11. மொர்தெகாயின் வளர்ப்பு மகளான எஸ்தர் ஏற்கனவே அவன் சொற்கேட்டு நடந்து வந்து கொண்டிருந்தவள். ஆமானின் சதித்திட்டத்தை மேற்கொள்ள அவன் எஸ்தரிடம் கூறிய ஆலோசனை என்ன? " நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?”

இதுவே நமக்கும் இந்நாட்களிலில் இறைவன் கொடுக்கும் ஆலோசனையாகும். நாம் மவுனமாயிருக்க முடியாது. நாம் செய்ய வேண்டியது இதுதான். அவர் நாமம் தரிக்கப்பட்ட நாம் நம்மைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, கர்த்தர் முகத்தைத் தேடி, நம் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற அவர் கேட்டு, நம் பாவத்தை மன்னித்து, நம் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பார் (2 நாளாகமம் 7:14). எஸ்தர் இதைத் தான் செய்தாள்!        

ஜெபித்த எஸ்தர்
யூதர்களின் விடுதலைக்கான காரணத்தை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், அது "ஜெபம்" ஆகும். ஆலோசனக் கூறிய மொர்தெகாயிற்கு எஸ்தரின் பதில் என்ன?"சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்!" என்பதாகும். ஒரு ஜெப இயக்கம் அவள் மூலம் உருவானது. யேகோவாவின் நாமம் தடை செய்யப்பட்ட அரமனைக்குள் பெண்கள் ஜெபக்குழுவைத் துணிந்து தொடங்கினாள். எஸ்தரின் நம்பிக்கை ஜெபத்திலிருந்தது, அதுவும் கூட்டுப் பிரார்த்தனையில்! 

தேசத்திற்காக உபவாசித்து ஜெபிக்கும் ஆவிக்குரிய கலாச்சாரம் கிறிஸ்தவர்களிடம் குறைந்து வருவதால்  சபைகளிலும், நம் தேசத்திலும் பிரச்சனைகளும் அதிகமாகின்றது. விசுவாசத்திற்கான நல்ல போராட்டத்தைப் போராட, காரியம் தலைகீழாய் மாற நாம் திருமறைக்குத் திரும்பி நம் ஜெப முயற்சிகளை அதிகமாக்க வேண்டும். எஸ்தர் ஜெபத்தின் மூலம் வல்லமைப் பெற்று இராஜாவின் தயையையும் பெற்றுக் கொண்டாள். நாமும் ஜெபத்தின் மூலம் இராஜாதி இராஜாவின் தயையையும், நம் தேசத்தின் ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரின் தயவையும் பெறுவோம். எஸ்தரின் சரித்திரக் கதையில் பிரச்சனையைக் கொண்டு வந்த ஆமான் மாத்திரமல்ல அவன் குடும்பத்தினர், அவனை ஆதரித்தவர் அனைவரும் அழிந்து போனார்கள்.


படுகுழியை வெட்டின ஆமான் தானே அதில் விழுந்தான்; கல்லைப் புரட்டின அவன்மேல் அந்தக் கல் திரும்ப விழுந்தது (நீதிமொழிகள் 26:27). அவன் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் அவனையேத் தூக்கிப்போட்டார்கள் (எஸ்தர் 7:10). கர்த்தர் எஸ்தருக்கும், ஆமானிற்கும், சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுத்தார் (ஏசாயா 61:3). அவர்தம் பிள்ளைகளின் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார்; அவர்களின் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால்  இடைகட்டினார் (சங்கீதம் 30:11). இன்றும் தேவன் நம் தேசத்தின் கடினமான சூழல்களைத் தலைகீழாக மாற்றித் தருவார். நம் குடும்பங்களை, சபைகளை, நாட்டை நம் நேரிய வாழ்வினாலும், ஜெபத்தினாலும் ஆசீர்வதிப்போம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

Tables Turned: To Bless A Nation

The book of Esther explicitly does not have the name of Yahweh written in it. But the implicit content of the book is the power of the Yahweh God.  What I am undertaking here is a puny perspective of a gold mine and treasury of God’s wisdom in the whole of the book of Esther. There were three prime characters involved in this powerful story most of us are familiar with. One was not alive when the climax scene happened.  It is he who I am going to bring out first because it was he, who gave a supreme climax to the story!

Problematical Haman
Though superficially the problem brought forth by Haman looked like it was against a man at the gate of the place named Mordecai, intrinsically it was against a nation, a people group. (3:5-6, 4:1-3). Even today our struggle is not against flesh and blood, but against the rulers, against the authorities, against the powers of this dark world and against the spiritual forces of evil in the heavenly realms. This month we celebrate the independence our nation enjoys from foreign rulers. But truly there is an upper-hand attitude of the majority-faith-believers of our nation against the minorities. The Christian minority still remains foreign to the present rulers of our nation.  Like Paul, how are we going to fight a ‘good’ fight for our faith in the Indian context?

Resourceful Mordecai
The resourceful person for bringing freedom for the Jews was Mordecai. His counsel at the right time to Esther was like golden apples in settings of silver (Proverbs 25:11). He told Queen Esther, his adopted daughter (who had come to that position by obeying his counsel), “Do not think that because you are in the king's house you alone of all the Jews will escape. For if you remain silent at this time, relief and deliverance for the Jews will arise from another place, but you and your father's family will perish. And who knows but that you have come to royal position for such a time as this?"  (4:13-14). When people faces crisis with regard to faith, we need to listen to the counsel of God. Out of the many, one counsel is supreme, yet, simple: “if my people, who are called by my name, will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then will I hear from heaven and will forgive their sin and will heal their land.” (2 Chronicles 7:14) Interestingly Esther did exactly this.

Prayerful Esther
 If at all there could be one word for the turn of events in the struggle for lives in this historic Jewish event, it was “prayer.” Read her reply to Mordecai:  “Go, gather together all the Jews who are in Susa, and fast for me. Do not eat or drink for three days, night or day. I and my maids will fast as you do. When this is done, I will go to the king, even though it is against the law. And if I perish, I perish." Esther initiated a prayer movement. She mobilised a prayer cell in her women’s domain.  She could do this boldly in a place, a palace, where Yahweh’s name was prohibited. Esther believed in prayer and that too corporate prayer.

The spiritual culture of fasting for nation is slowly weaning in the Christian context today and that is why we have an upheaval of problems in our churches and in our country. To fight a good fight for our faith, to turn the tables, we need to turn to the Bible and increase our prayer initiatives. Powered by prayer, Esther received favour in the eyes of the King. We too will receive favour in the eyes of our King of kings and our local rulers and authorities through our prayers. In Esther’s story, not only the problematical Haman, even his family, his supporters paid the cost for scheming against the people of Yahweh-faith. They had a tragic end. Haman fell into the same pit which he had dug for the Yahweh-worshippers. The stone rolled back on him (Proverbs 26:27).  He was hanged to death on the same pole which he had erected to execute Mordecai.

The key is our dependence on God through prayer. The wailing of the Yahwistic Jews turned into dancing; HE removed their sackcloth and clothed them with joy (Psalm 30:11), HE gave Esther and Mordecai crowns of beauty instead of ashes, oil of gladness instead of mourning, a garment of praise instead of a spirit of despair (Isaiah 61:3). God still can turn the tables upside down in our situations. Let us bless our families, churches and nation through our upright living and prayers. Happy Independence Day!


Saturday, June 20, 2015

Power of Prayer


Her Problem – A God Ordained One

Do we know that sometimes our problems are ordained by God? Hannah’s was! The Lord closed her womb (1:6). More than her inability to bear a child was the provoking pointed at her from her rival Peninah, who had children. The irritation caused by her overweighed the love shown by her husband, Elkanah. None could comfort her, not even her husband. He showed his love by giving double and special portion of the sacrificial meat. But nothing would satisfy this woman who was repeatedly bullied and yelled at by Peninah which usually ended with Hannah sobbing and foregoing food. This was a constant problem which continued for years (v. 6-7). Her soul was bitter with sorrow. Her final resort was God. In Hannah’s case, her problem was ordained by God. He knew who could handle a problem better – Hannah or Peninah? He knew that only a pained Hannah can make a meaningful prayer to God. God allows his children whom he loves to suffer. Only the future would reveal us the cause of the present suffering.

Her Prayer & Promise – A Different One
Her prayer loaded with much crying was a different one that birthed a vow (a promise to God). It was not a loud and laudable prayer with flowery language. It was a silent prayer that came out of anguish. Eli did not like the way she prayed and he even went to the extent of scolding her whether she was drunk and asked her not to drink. Her prayer was not a selfish one. It was for the welfare of a nation that was morally decaying. She pledged to place her child at the altar which was then getting defiled everyday by the sons of the priest’s family of her time.

What I love so much is that Hannah was not a critic of her context, rather she pledged her son for a life-time ministry, wanting him to be a solution to the context. Her prayer was specific as to what kind of ministry her son of promise would be in. It would be a specialized ministry of the Nazirite kind where there would be a life-time of restrictions. His hair would not be cut-off and his son of promise would lead an ascetic life. No wonder, her son, Samuel became a revivalist in the declining nation of Israel. He was a judge and prophet whom God powerfully used. People abandoned their idol-worship and clung to the Yahweh God. Are our prayers and promises so different enough to make a difference in our nation? What should we do to make that happen?

Her Praise – A Noteworthy One

Hannah was never sad after this significant prayer (v.18). Her life of praise is seen in the way she fulfilled her vow. Samuel would have been 12 year old, Bible scholars say at the time of being left at the temple by his parents as a Nazirite. Hannah’s prayer of praise is a noteworthy one in all of Scriptures for its liberation insights. Mary, mother of Jesus centuries later sings a similar song. They both were raised up from neglected statuses. They knew their God as their Saviour. So they received favour from Him. These songs of liberation are so meaningful even today in oppressive contexts. God’s favour is upon the Dalits, Adivasis, women or anyone who have been taunted, but have found their refuge in God. Such transformed individuals are the ones who transform the nation with the power of the living God. They beget a Samuel like how Hannah did. They beget a Saviour like how Mary did.

For Hannah, the bridge between her problem and her praise was a simple prayer with a promise. Like in Hannah’s case, the LORD is close to the broken-hearted and saves those who are crushed in spirit (Psalm 34: 18). There is power in the prayer of an oppressed believer. But we need to pray with a difference to make a difference in the lives of many. The plight of a nation like India is in the hands of women who can pray like Hannah. Our children are the solution to the problems our nation is facing. Therefore let us raise a Godly generation through our problems, prayers, promises and praises.

-– Reflections from the Life of Hannah from 1 Samuel 1 &2





Saturday, March 21, 2015

நறுமணமா? துர்நாற்றமா? - நம் குடும்பங்களிலிருந்து...

நம் நாட்டிலுள்ள தற்போதைய சூழலில் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்றுத் திணறும் பெற்றோருக்கு வேதத்தில் ஆதியாகம் 34 ம் அதிகாரத்திலுள்ள தீனாளின் சரிதை பிள்ளைகளின் வாழ்வில் வேதம் எதிர்பார்க்கும் கலாச்சாரத்தைக் குறித்து வெளிச்சம் தருவதாக இருக்கின்றது. தீனாள் சீகேம் என்னும் பட்டணத்தில் அந்நிய தேசத்துப் "பெண்களைப்" பார்க்கத் தனியாகப் புறப்பட்டாள் என்று இங்கு காண்கின்றோம். எந்தப் பட்டணத்திலும் "பெண்கள்" மாத்திரம் இருப்பது இல்லை. யேகோவாவை வழிபட்டு வந்த அவளுக்கு சீகேம் பட்டணமானது விசுவாசத்திலும் கலாச்சாரத்திலும் முழுவதும் மாறுபட்ட இடமாகும்.

தீனாள், உயரிய‌ கீழ்படிதலுக்கு இலக்கணமான ஆபிரகாமின் கொள்ளுப்பேத்தி. ஆபிரகாமின் கீழ்படிதலால் அவன் மாத்திரமல்ல, அவன் வருங்கால சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை ஆதியாகமம் 12:1‍-3 ல் பார்க்கலாம். ஆபிரகாமின் சந்ததி பூமியிலுள்ளோருக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்றும், இவர்களை ஆசீர்வதிப்போர் ஆசீர்வதிக்கப்படுவர், சபிப்போர் சபிக்கப்பட்டிருப்பர் என்றும் வாசிக்கின்றோம். நாடோடிகளாயிருந்த ஆபிரகாமின் சந்ததியாரை அவரை சுமக்கும் கருவிகளாக இறைவன் வைத்திருந்தார் என்பது தான் உண்மை. அவர்களோடு சம்பந்தங்கலக்கும் யாவரும் யேகோவாவை அவர்கள் வாழ்விலிருந்து வீசும் நறுமணத்தின் மூலம் அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவரது திட்டம். இந்த சூழலில் தான் தீனாள் சீகேமிலிருக்கும் "பெண்களைப்” பார்க்கச் சென்றாள். அந்தப் பட்டணத்திலிருந்த சீகேம் என்னும் இளைஞன் அவளைத் தீட்டுப்படுத்தினான். தீனாள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை; அவள் யார் உதவியுமின்றித் தன்னைத் தான் காத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கலாம். ஆனால் அது அவளால் முடியாமல் போனது!

தீர்மானங்களும், போராட்டங்களும்
நாமும் பல வேளைகளில் இப்பாவம் நிறைந்த உலகில் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம் என்று நினைத்துத் தவறிப்போனது தான் மிச்சம்! வாழ்வில் தவறுதலாக நாம் எடுக்கும் தீர்மானங்கள் மலை போன்ற போராட்டங்களுக்கு நேராய் நம்மைக் கொண்டுபோய்விடுகின்றது. அவிசுவாசியான ஒருவரோடோ, பலரோடோ சம்பந்தம் வைப்பது பற்றி வேதம் இவ்விதம் கூறுகின்றது: "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? விசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?" (2 கொரிந்தியர் 6:14-15) இந்நிலையில் நாம் சரியாகத் தெரிவுசெய்வதுக் குறித்து கர்த்தர் சொல்வது என்ன? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என்
கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” (சங்கீதம் 32:8). வேதமே நமக்கு வெளிச்சம்.

தீனாளைத் தீட்டுப்படுத்தினபின் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக அந்த வாலிபன் கூறினான். பாவம் தீனாள்! 23 ம் வசனத்தை நோக்குங்கால், அவன் தீனாளுடைய தகப்பன் வீட்டு ஆடுமாடுகள், ஆஸ்திகள், மிருகஜீவன்கள் எல்லாம் அவனையும் அவன் தகப்பன் வீட்டையும் சேரும் என்ற‌ ஒரு உள் நோக்கத்தோடு அதை சொல்லுகின்றான் என்று அறிந்துகொள்ளுகிறோம். தீனாளுடைய சகோதரர்கள் தங்கள் தங்கை சீகேமால் அவமானப்பட்டதைக் கண்டு கொதித்தெழும்புகின்றனர். பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களும் ஒரு திட்டத்தை மறைவாகத் தீட்டுகின்றனர்!சீகேமின் திருமண ஒப்பந்தம் சம்ம‌திக்கப்பட வேண்டுமானால், அப்பட்டணத்தின் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொள்ள‌ வேண்டும் என்று ஒரு நிர்ப்பந்தம் வைக்கின்றனர். அதை அம்மனிதர் செய்து வேதனையில் இருக்கும்போது தீனாளின் சகோதரர் தாங்கள் திட்டமிட்டபடி சீகேம் உட்பட, அனைத்து ஆண்களையும் கொன்றுவிடுகின்றனர். பெண்ணுக்குத் தீங்கு இழைத்த ஒருவன் நிமித்தம் ஒரு பெருங்கூட்ட ஆண்களின் உயிர் பறிபோகின்றது.

நடத்தைகளும், அணுகுமுறைகளும்
பெண்களுக்கு ஆண்கள் இழைக்கும் தீங்குக்கும், கொடுமையான நடத்தைக்ளுக்குப்பின் ஒருவருக்கிருக்கும் பொல்லாத எண்ணங்களுக்கும் வேதம் எதிர்த்து குரல் கொடுக்கின்றது. வேதம் சொல்லுகின்றது: "முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 4:22௨24). எனவே மனித அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுகின்றது. நாம் கொடூரமாக நடக்க நிர்பந்தம் ஏற்படுகின்ற சூழல்களில் நம்மைத் தடுத்து ஆட்கொண்டு, நீதி நியாயத்தை நிலைநிறுத்துகிறவர் கிறிஸ்து. நம்மை பாவம் செய்யாமல் தடுத்துக் காப்பாற்றுகிறவர் அவரே.

நறுமணமும், துர்நாற்றமும்
தீனாள் தன் பின் நாட்களை இச்சையாலும் வன்மையாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக கழிக்க வேண்டியிருந்தது. அவள் தகப்பனாகிய யாக்கோபும், "இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்" என்று தன் குடும்பத்தின் மேல் வந்த அவமானத்திற்காக வருந்துகின்றான். மற்றவர்களுக்கு நறுமணத்தை வீச‌வேண்டிய இக்குடும்பம் துர்நாற்றத்தை வீசியது.

நறுமணம் வீசும் வாழ்வைக் குறித்த கருத்துக்களைக் கீழ்காணும் வசனங்களில் தெரிந்துகொள்ளலாம்: "கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." (எபேசியர் 5:2) "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." (2 கொரி. 2:14 15).

இன்றைய வாலிபருக்கு இக்கதை ஒரு எச்சரிப்பின் சத்தமாக இருக்கின்றது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் (சங்கீதம் 119:1). வாலிபர் தங்கள் வழியை எதினால் சுத்தம்பண்ணுவார்கள்? வேத‌ வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே (வ.9). கிறிஸ்தவப் பெற்றோரும், சமுதாயமும் அன்பையும், கிறிஸ்துவைப் பற்றிய அறிவாகிய வாசனையையும் தங்கள் பிள்ளைகளுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் அளிக்கவேண்டும். "எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருக்கவேண்டும்" (சங் 144:12) என்பது நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.

Monday, March 2, 2015

அன்பற்றத் திருமண உறவுகள்

'நான் உன்னைத் திருமணம் செய்திருக்கக் கூடாது!' என்று கணவர், மனைவியர் ஒருவரையொருவர் பார்த்துக் கூறுவதுண்டு. சிலர் இன்னும் கடினமாக, 'உன்னைத் திருமணம் செய்ததற்குப் பதிலாக நான் இன்னாரைத் திருமணம் செய்திருக்கலாம்' என்று கூறுவதுண்டு. 'இது என் வாழ்வில் நடந்திருக்கவேக் கூடாது' என்னும் கூற்றை நம்மில் அநேகர் கூறியிருக்கக்கூடும். இப்படிப்பட்ட வார்த்தைகள் திருமண வாழ்வை நரகமாக்குகின்றது.  அன்பற்ற உறவுகளிலே நாம் என்ன செய்யக்கூடும்?

தான் விரும்பாத, அழகற்ற லேயாளை யாக்கோபு திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது. பாவம் லேயாள்! விரும்பப்படாத மனைவியாகவே அவள் வாழ்ந்தாள். பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், "புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தம், பூமி சஞ்சலப்படுகிறது" என்று நீதிமொழிகள் 30:23 சொல்லுகின்றது. யாக்கோபுக்கும் லேயாளுக்கும் இருந்த பந்தம், தான் முதன் முதலில் விரும்பிய அழகான ராகேலை திருமணம் முடித்தபிறகு இன்னும் மோசமடைந்தது. பதினான்கு வருடங்கள் ராகேலுக்காக அவன் உழைத்ததிலிருந்து இதை உணர்ந்து கொள்ளலாம். எவ்வாறாகத் தான் லேயாள் இந்த அன்பற்ற உறவை சமாளித்தாள்? அன்பற்ற உறவாயிருந்தாலும் பிள்ளைகளை அதிகமாக பெற்றுத் தள்ளிய லேயாளால் கணவனின் அன்பை பெற முடிந்ததா? ஒவ்வொரு குழந்தைக்கும் அவள் வைத்த பெயர்கள் மூலம் நாம் லேயாளிடமிருந்து சில காரியங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம்.

முதல் மூன்று குழந்தைகளுக்கு பெயரிடும் போது அவளுடைய கணவன் அவளிடம் அன்பு கூற வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் பொருள்படும்படி பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:32-34). ஒரு திருப்பு முனையை அவளுடைய நான்காம் பிரசவத்தின் நேரத்தில் காண்கின்றோம். அப்பொழுதிலிருந்து ஆக்கப்பூர்வமான வார்த்தைகளைப் பேசத் துவங்கினாள். நான்காம் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, "இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" என்று சொல்லி யூதா என்று பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:35). கணவனுடைய அன்பை பெறுவதில் தோல்வியடைந்த சமயத்தில் அவள் ஆண்டவரைத் துதித்தது தான் அந்த சிறப்பான மனமாற்றம் ஆகும்.

இன்னும் ஒரு குழந்தையும் பெறாத ராகேலின் மன உளைச்சலையும் நாம் சிந்தித்துப் பார்க்க‌ வேண்டும். ஆனால் அவளிடமிருந்து ஒரு அழிவுப்பூர்வமான வார்த்தை வருகின்றது: "எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்" (30:1). அந்த நாட்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றின ராகேல் தன் வேலைக்காரியை யாக்கோபுக்குக் கொடுத்து அதன் மூலம் பெற்ற குழந்தைக்கு, "நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்" என்ற பொருளில் பெயரிடுகின்றாள் (30:8). லேயாளும் அதே முறையைப் பின்பற்றி, "நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்" என்று பொருள்படும் பெயரை இடுகின்றாள் (30:13). " மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்" என்று நீதிமொழிகள் 18:21 கூறுகின்றது.  நம்முடைய‌ அன்பற்ற நிலைமைகளில் ஆண்டவரை நம்பி ஆக்கப்பூர்வம்மான வார்த்தைகளைப் பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். 

எனவே லேயாள், அடுத்த குழந்தைப் பிறந்த போது, "இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார்" (கனம் பண்ணுவார் என்று ஒரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது) என்று கூறுகின்றாள் (30:20). கணவனிடமிருந்து அவளுடைய எதிர்பார்ப்பு மாறி விட்டது. அன்பு திருமண வாழ்விற்கு முக்கியம் என்றாலும் நடைமுறையில் தேவைப்படுவது கனமும் மரியாதையும் அன்றோ?

ராகேலுக்கு அவள் எதற்கு அதிகம் ஆசைப்பட்டாளோ அதுவே அவள் உயிர் கொல்லியாக மாறிவிட்டது. "துக்கத்துடனே மகனைப் பெற்றென்" என்று பொருளுள்ள பென்யமீனைப் பெற்று விட்டு அப்பிரசவத்தில் மரித்து விடுகின்றாள் (35:18). அவளுக்கு அழகிருந்தது, கணவனின் அதிகமான அன்பு இருந்தது. ஆனால் குழந்தை பெறுவதில் பிரச்சனை இருந்தது.

விவிலியத்தின் நாட்களில் இறந்த பிறகு ஒருவரை அடக்கம் பண்ணும் இடம் அவருக்கு கனத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ராகேலை பிரயாணத்தில் வழியிலேயே அடக்கம் பண்ணும் சூழல் ஏற்பட்டது. ஆனால் லேயாள் அவள் கணவனான யாக்கோபோடே குடும்பக் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டாள். மட்டுமல்ல, நித்தியத்திலே லேயாளுக்கு  தன் மகனான லேவியின் மூலமாக அவள் இஸ்ரவேலின் பெருமை வாய்ந்த ஆசாரிய வம்சத்தாரின் தாயானதும், தன் மகனான யூதாவின் மூலமாக தாவீது வழி வந்த ராஜாக்களுக்கும் அவ்வழியே வந்த இயேசு ரட்சகரின் தாயானதும் தெரிய வந்திருக்கும். அன்பற்ற திருமண உறவில் எது நடக்கும், எது நடக்காது என்பதைக் கற்றறிந்த லேயாளுக்கு நித்தியத்தில் மிகுதியான பலன் கிடைத்தது.

தங்களுக்கு உள்ளதில் நிறைவாய் இருந்திருப்பது இருவருக்கும் சரியாய் இருந்திருக்கும்.  லேயாளுக்கு அழகும், அன்பும் கிடைக்கும் பாக்கியமில்லை. ஆனால் அவளுக்கு குழந்தைகள் பிறந்தன. கர்த்தர் மேல் அவள் பார்வை திரும்பியதிலிருந்து உண்மையான் அன்பு எது, உலக அன்பு எது என்பதை புரிந்துகொண்டு வாழ்வில் நிறைவாய் இருக்கக் கற்றுக் கொண்டாள். ராகேலுக்கு அழகு இருந்தது, கணவனின் அன்பு இருந்தது. ஆனால் வார்தையிலும், வாழ்விலும் நிறைவில்லை. பவுல் சொன்னது போல, "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்று அன்பற்ற உலக உறவுகளில் ஆண்டவரின் அன்பில் திழைத்து நிறைவாய் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


மனிதர்களாகிய நமக்கு அன்பற்ற உறவுகளின் நிமித்தம் உணர்வுகளில் அதிகமான பாதிப்புகள் இருக்கக் கூடும். யார் நமக்கு நம் உணர்வுகளிலிலும், சிந்தைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்? பவுல் இந்த இரகசியத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார். "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." (பிலிப்பியர் 4: 12-13) எனவே லேயாளைப் போல கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அன்பற்ற உறவுகளிலே அவரே நம்மை வாழ்வில் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழச்செய்வார்.

Friday, February 27, 2015

ஒரு பெண்ணின் வாழ்வில் - விடியல் தந்த வெளிச்சம் ‍

சிலுவையின் கீழ் நின்று கொண்டிருந்த மரியாள் அடைந்த‌ வேதனையை வேறு எவரும் அடைந்திருக்கமாட்டார்கள். கண்ணெதிரில் அவள் மகனாகப் பெற்றெடுத்த இயேசு வேதனையில் துடிக்கின்றார். பழைய ஏற்பாட்டு சரித்திரத்தில் ஆகாரும் இதே சூழலில் தன் மகன் இஸ்மவேல் தன் கண் எதிரில் சாவதைக் கண்டுத் துடித்தாள். அவள் கண்ணீரைக் கண்ட தேவன் அவர்கள் இருவருக்கும் தேவையான தண்ணீரைத் தந்தருளினார். ஆனால் மரியாளின் சூழலிலோ அவள் அழுதும் இறைவன் மௌனமாக இருக்கிறார். இயேசு வேதனையின் உச்சக்கட்டத்தில், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்றுக் கதறிய போது பதில் எதும் இல்லை. தன் மகவாகிய இயேசு இவ்விதமாக சிலுவையில் மரிக்க வேண்டும் என்பது இறைத் திட்டம் என்பதை புரிந்துகொள்ளுவதற்கு அவளுக்கு கடினமாக இருந்திருக்கும். சேவகன் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தினபோது அது மரியாளின் இருதயத்தில் குத்தினது போலிருந்திருக்கும்." உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்" என்ற தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதல் இது தானோ? மரியாள் சிந்திக்கலானாள்.

தாயின் நினைவுப் பெட்டகம் விலையேறப்பெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிறு பிள்ளைப் பிராயத்தைக் குறித்து அதிகம் எழுதியிருக்கும் லூக்கா அந்த தகவல்களை அவர் தாயாகிய மரியாளிடம் பெற்றார் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இப்பொழுது சிலுவையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும் மரியாளின் சிந்தனைச் சிதறலில் பிள்ளை இயேசுவை அவளும் யோசேப்புமாகத் தேடியதும், ஆலயத்தில் மதத் தலைவர்களோடு அவர் சம்பாஷிப்பதைக் கண்டு பெற்ற இன்பமும் அவள் நினைவில் வந்திருக்கும். ஆனால் இப்பொழுதோ தன் குழந்தையின் உயிர் அணு அணுவாக அவரைப் விட்டுப்போகின்றதே தவிர, அவரைத் திரும்ப பெற முடியாது என்றே நினைத்திருப்பாள். மழலை இயேசுவின் புன்முறுவல்கள், குறும்புத்தனங்கள், மற்றும் வளர்ந்த நாட்களில் பெற்றோருக்கு அடங்கி இருந்ததும் நினைவில் வருகின்றதுஆனால் இன்றோ அக்கீழ்படிதலுள்ள பிள்ளை உதவியற்ற சூழலில் பரம பிதாவிற்கு மாத்திரம் கீழ்படிந்திருப்பது புரியாத புதிராக மரியாளுக்கு இருந்திருக்கும். தான் சொன்னதன் பின்னர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றின தன் பிள்ளை இப்பொழுதோ கொடிய குருசில் நாவறண்டு, "தாகமாயிருகிறேன்" என்று சொல்லுகின்றார்.

இந்த நேரத்தில் தன் தாயின் கண்ணீரை இயேசு காண்கின்றார். அவர் கரங்களில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்ததால் அவரால் தாயை அணைக்க இயலாது. கண்ணீரைத் துடைக்க முடியாது. மெல்ல முனகுகின்றார்: ஸ்திரீயே, அதோ, உன் மகன்”. அவர் மனதுருக்கமுள்ள கண்கள் யோவான் பக்கம் திரும்புகின்றது: "அதோ, உன் தாய்" என்றார். இயேசுவின் சகோதரர் இன்னும் அவருடைய சீடராகாததால், யோவானத் தன் சகோதரன் ஸ்தானத்தில் தெரிவு செய்கின்றார். மரண வேதனையின் மத்தியிலும் இயேசுவின் அன்பும் பரிவும் கண்டு மரியாளின் கண்ணீர் பெருக்கெடுத்திருக்கும்.

தானும் தன் மற்றப் பிள்ளைகளுமாக ஒரு முறை இயேசுவை சந்திக்கச் சென்ற சமயம், அதிகமான ஜனக் கூட்டத்தினிமித்தம் அவளால் மகனிடம் செல்ல முடியவில்லை. பாவம்! அவள் எப்பொழுதும் தன் மகனை தூரத்திலிருந்து அழகு பார்க்கும் சூழல் தானிருந்தது. ஊழியத்தினிமித்தம் பிள்ளைகளைத் தொலைவிலிருக்கும் விடுதிகளில் விட்டிருக்கும் பெற்றோர், வேலை, திருமணம் போன்ற காரணங்களால் தங்கள் கூட்டை விட்டுப் பறந்து சென்றப் பிள்ளைகளை தூரத்திலிருந்து அழகு பார்க்கும் பெற்றோர், அருமையான பிள்ளைகளை இழக்கக் கொடுத்தப் பெற்றோர்,‍ எதிர்த்து பேசி  விரோதிகளாகப் பிள்ளைகளால் தள்ளி வைக்கப்படும் பெற்றோர்  போன்ற ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் தேவன் இவர்!

அவரைக் காண ஆவலாயிருந்த தாய் மரியாளிடம் இயேசு சொன்னது என்ன? "என் தாயார் யார்? என் சகோதரர் யார்?” என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்!" (மத்தேயு 12:48-50) அவ்வார்த்தைகள் மரியாளுக்கு கேட்கக் கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவை குடும்பம் என்னும் வார்த்தைக்கான அகன்ற அர்த்தத்தை சிந்திக்க அவளைத் தூண்டியிருக்கும். இயேசுவின் அகராதியில் குடும்பம் சரீர வரையரையைத் தாண்டிய ஒன்றாகவேக் காணப்படுகின்றது. மரியாளுக்கு மேலும் சில வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும். புலம்பி அழுகிற ஸ்திரீகள் (மரியாள் உட்பட!) அனைவரையும் நோக்கி இயேசு சொன்னது: "எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." (லூக்கா 23:28)

மரியாளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அவள் தனக்காகவும் தன் மற்றப் பிள்ளைகளுக்காகவும் அழுதாள். இயேசுவின் உயிர்த்தெழுந்த நாள் அவளுக்கு விடையளித்தது. தன் பாலகனான, ஆனால் இப்பொழுது, மரணத்தை வென்றத் தன் ஆண்டவராகிய இயேசுவை மீண்டும் பார்ப்பது அவளுக்கு எத்தனை ஆனந்தத்தை உண்டாக்கியிருக்கும்! அவளும், இயேசுவின் மற்ற சகோதரரும் தங்கள் இரட்சகராக பரிபூரணமாக‌ அவரை ஏற்றுக்கொண்ட பின் திருச்சபைத் தொண்டராக, தலைவர்களாக மாறினர்.
மரியாளைப் போன்றே நம் வாழ்விலும் பட்டயங்கள் ஊடுருவியிருக்கலாம். ஆனால் சிலுவையும், பட்டயமும் முடிவல்ல! உயிர்த்தெழுந்த இயேசுவை ஆண்டவராக ஏற்றிருப்போருக்கு வெற்றி நிச்சயம். அல்லேலூயா!