மிஷனரிக்
கண்ணாடியை அணிந்து கொண்டு ஆதியாகமப் புத்தகத்தைத் தொடர்ந்து ஆராய்வோம். இத்தொடரின் முந்தின கட்டுரையை இங்குக் காணலாம்:
பொய்யான மதங்கள்
என்றைக்கு
ஆதாமும் ஏவாளும் சாத்தான் தூண்டின சர்ப்பத்துக்கு கீழ்படிந்தார்களோ அன்று அவர்கள் பொய்யான மதங்களுக்கு வழிவகுத்தார்கள். இன்றும் அறியாமையினால் பாம்பை வழிபடுபவர்களை நாம் அறிவோம். காயீன் கனிகளாலான காணிக்கையைப் படைத்தான். இரத்த பலிக்கான முன்னோடியை இதற்கு முன்னரே, ஆதாம் ஏவாளின் பாவத்தை மூட தேவன் தோலுடைகளை உண்டாக்கினதன் மூலம் வழிகாட்டியிருந்தார். ஆபேல் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்த காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
காயீன, கர்த்தர்
கொடுத்த ஆலோசனையை மீறி ஆபேலை கொலை செய்தான். அவர் சொன்னது என்ன? "நீ நன்மைசெய்தால் மேன்மை
இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில்
படுத்திருக்கும்” (வ.7). மேலும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு காரியம் உண்டு. ஏன்
காயீன் தன் பொறுப்பை உணராமல், "என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?" என்று கூறினான்? பரந்த இவ்வுலகில் நாம் ஒருவருக்கொருவர் காவலாளிகள் தானே?
நம்
கடமையை நாம் உணரும் போது தான் இவ்வுலகில் நிலவும் தீமையை நாம் மேற்கொள்ள முடியும். பாவமானது தொற்று நோயைப் போன்று நம் முன்னோரின் வாழ்வில் பரவத் தொடங்கியது. ஆதியாகமப் புத்தகத்தில் இல்லாத பாவம் என்று இன்று ஒன்றும் கிடையாது. மக்கள் அனுதினமும்
பாவத்தில் அழியும் சூழலில், மரித்தும், இன்றும் பேசும் ஆபேலின் சத்தம் என்னவாக இருக்கும்? அழிந்து போகும் மானிடரை மீட்டு சகோதரருக்கு காவலாளியாய் இரு என்பதே! (எபிரேயர் 11:4)
பாவத் தோஷம்
பூமியானது
தேவனுக்கு முன்பாக சீர்கெட்டு கொடுமையினால்
நிறைந்திருந்தது. அதனால் தேவன் பூமியை அழிக்க சித்தங்கொண்டார். பாவத்திற்குப் பரிகாரம் தேவை. இந்த முறை நீரைக்கொண்டு என்று முடிவானது. ஆனால் தேவன் ஒரு மீட்பின் திட்டத்தையும் தீட்டினார். அவர் நோவா என்ற ஒரு மனிதனை நீதியைப் பிரசங்கிக்கூடியவனாகக் கண்டார் (2 பேதுரு 2:5). நோவாவைக்
குறித்து நான் வியக்கும் காரியம் என்னவென்றால், அவர் அந்த நாளின் உலகை தன் பிரசங்கத்தால் மீட்க முடியாமற்போனாலும், சொந்த குடும்பமான, மனைவி, 3 மகன்கள், 3 மருமகள்கள் ஆகியோரை மீட்க முடிந்தது. அந்த முதல் உலக வெள்ளத்தில் மற்றோர் அழிய, இறை வார்த்தைக்குக் கீழ்படிந்த இக்குடும்பத்தினர் மாத்திரம் பேழையில் பாதுகாக்கப்பட்டனர். நம்பிக்கையற்ற இவ்வுலகில் நம்பிக்கை உண்டு. நாம் நோவா குடும்பத்தினரைப் போன்று நம்பிக்கைப் பாத்திரங்களாக இருக்கிறோமா?
பாவப் பரிகாரம்
வெளிப்புற
சுத்தாக்கம் போதுமானதல்ல என்பது போல வெள்ளம் முடிந்தவுடன் பாவம் நோவாவின் குடும்பத்திலேயே தலைகாட்டத் துவங்கியது. நோவா, தான் அறியாமலேயே திராட்ச ரசத்தால் வெறிகொள்ள நேர்ந்ததையும், அவன் மகனான கானானின் விசித்திரமான பாவ சூழலையும் வேதத்தில் காண்கிறோம் (9:21-25). பாவத்தின் சீற்றம் என்பது இது தானோ? நோவாவின் காலத்தில் ஆபேலிற்குப் பிறகு தொழுகைக்கு மிருகங்களை பலி செலுத்தும் முறை மீண்டும் துவங்கினாலும், இயற்கைக்கும் அப்பாற்பட்ட பாவத்திற்கான பரிகாரம் இயற்கைக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தானே நியதி (8:20-22). சிலுவைக்கு மறுபக்கம் வாழும் நாம் காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் நம் பாவங்களை பூரணமாக நிவிர்த்திசெய்யமாட்டாது என்று அறிந்திருக்கிறோம் (எபிரேயர் 10:4). நமக்காக மரித்துயிர்த்தெழுந்த இயேசுவின் இரத்தம் மாத்திரமே சகல பாவங்களையும் நிவிர்த்தி செய்ய வல்லமையுள்ளது என்று விசுவாசிக்கிறோம். பாவ சூழலிலும் நோவாவின் குடும்பத்தாருக்கு, ஆதாம், ஏவாளைப் போன்றே, "கர்த்தர் சாயலுக்குள் மீட்கப்பட்ட மாந்தரால் பூமியை நிரப்ப வேண்டும்" என்னும் கட்டளைக் கொடுக்கப்பட்டது (9:7) என்பது குறிப்பிடத்தக்கது.
பாபேலும், உலகமும்
தேவன்
பூமியெங்கும் தன் மகிமையால் நிரப்பப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டிருந்தும் ஒரு கூட்டத்தினர், “நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள்” என்று சொல்லி பாபேலிலே கோபுரம் கட்டத் துவங்கினார்கள். அப்பொழுது திரியேக தேவன்: "நாம்
இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம்" என்று சொல்லி அதன்படியே செய்தார் (வ.7) என்று வேதம் கூறுகின்றது. மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: மனிதர் தேவ மகிமையை பரவச் செய்யாததால், தேவன் அவர்களை சிதறடித்தார். உலகமெங்கும்
தோராயமாகப் பேசப்படும் 6500 மொழிகள் அந்நாளில் பிறந்தது!
வேத மொழிபெயர்ப்பு ஊழியங்களின் துரிதமான ஆரம்பம் மத்திய அமெரிக்காவில் ஒரு ஆதிவாசி மனிதன், மிஷனரியான கேமரூன் டவுன்சென்ட் எனபாரிடம் இவ்வாறுக் கேட்டதன் விளைவு ஆகும்: "உங்கள் கடவுள் பெரியவராயிருந்தால் என் மொழியை அவர் ஏன் பேசக் கூடாது?" இன்றும் பல மொழிகளில் முழு வேதாகமம் கிடையாது. இந்த பலதரப்பட்ட உலகில் சுவிசேஷம் அறிவிப்பதில் நம் பங்கு என்ன? பரலோகத்தில் சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த திரளான கூட்டத்தோடு இணைந்து 'இரட்சிப்பின் மகிமை எங்கள் தேவனுக்கு உண்டாவதாக' என்று ஆர்ப்பரிக்க எத்தனை பேருக்கு ஆவல்? 'ஆம்' என்போமானால் நாம் இந்த இரட்சிப்பின் செய்தியை கேட்கப்படாத இடங்களில் அறிவிக்க வேண்டும். முழங்காலில் யுத்தம் செய்ய வேண்டும். நம்முடைய பொருள்களையும் இப்படிப்பட்ட ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும். செய்வோமா?
வேத மொழிபெயர்ப்பு ஊழியங்களின் துரிதமான ஆரம்பம் மத்திய அமெரிக்காவில் ஒரு ஆதிவாசி மனிதன், மிஷனரியான கேமரூன் டவுன்சென்ட் எனபாரிடம் இவ்வாறுக் கேட்டதன் விளைவு ஆகும்: "உங்கள் கடவுள் பெரியவராயிருந்தால் என் மொழியை அவர் ஏன் பேசக் கூடாது?" இன்றும் பல மொழிகளில் முழு வேதாகமம் கிடையாது. இந்த பலதரப்பட்ட உலகில் சுவிசேஷம் அறிவிப்பதில் நம் பங்கு என்ன? பரலோகத்தில் சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த திரளான கூட்டத்தோடு இணைந்து 'இரட்சிப்பின் மகிமை எங்கள் தேவனுக்கு உண்டாவதாக' என்று ஆர்ப்பரிக்க எத்தனை பேருக்கு ஆவல்? 'ஆம்' என்போமானால் நாம் இந்த இரட்சிப்பின் செய்தியை கேட்கப்படாத இடங்களில் அறிவிக்க வேண்டும். முழங்காலில் யுத்தம் செய்ய வேண்டும். நம்முடைய பொருள்களையும் இப்படிப்பட்ட ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும். செய்வோமா?