Friday, July 15, 2022

வேறே ஆடுகள்


 “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” (யோவான் 10:16) என்று இயேசு கூறிய வார்த்தைகளில் ‘வேறே ஆடுகள்’ ‘ஒரே மந்தை’, ‘ஒரே மேய்ப்பன்’ என்னும் பதங்கள் சமீபத்தில் என்னை சிந்திக்கத் தூண்டின. அதன் விளைவே இந்த கட்டுரை.

பழைய ஏற்பாட்டில் வேறே ஆடுகள் – சில உதாரணங்கள்

அனைவரையும் உள்ளடக்கும் நல்லுள்ளம் கொண்ட தேவன், படைப்பில் அனைவரையும் அவர் சாயலில் படைத்தார். ஆண்களும், பெண்களும் ஆகிய நாம் அனைவரும்  பரிசுத்த ஜாதியே அன்றி இந்த ஒரே மந்தையில் வேறு எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது.

தேவன் யாக்கோபிடம் இவ்விதம் கூறினார்: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும். (ஆதியாகமம் 35:11) இதன் நிறைவேறுதலை ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றில் நாம் காணலாம். இந்த பட்டியலில் காணப்படும் தாமார் (கானானிய பெண்), ராகாப் (எரிகோவில் ஒரு வேசி), ரூத் (மோவாபிய பெண்), பத்சேபாள் (ஏத்தியனாகிய உரியாவின் மனைவி) ஆகியோரும் ‘வேறே ஆடுகள்’ தானே! தீர்க்கன் யோனா செல்ல விரும்பாத புறஜாதிகள் என்று கருதப்பட்ட நினிவேயினர் மனம் திருந்தினர். அவர்களும் வேறே ஆடுகள் தான்.

 புதிய ஏற்பாட்டில் - வேறே ஆடுகள் - சில உதாரணங்கள்

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார் (லூக்கா 4:18-28) என்று இயேசு கூறிய தன் அருட்பணியின் சட்ட வாக்கியத்தில் அவர் எத்தனை வித விதமான வேறே ஆடுகள் குறித்துக் கூறுகின்றார்? இப்படிப்பட்டோரை நாம் தினமும் சந்திக்கிறோம் அல்லவா?

இதைத் தொடர்ந்து அவர் பழைய ஏற்பாட்டின் ‘வேறே ஆடுகள்’ குறித்தும் குறிப்பிடுகின்றார்: அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல்  மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை.

ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, எழுந்திருந்து, இயேசுவை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? ‘வேறே ஆடுகள்’ குறித்த பாரத்தோடு செயல்படுவோருக்கு கட்டாயம் பிரச்சனை உண்டு எனபதும் தான்! பச்சை மரத்திற்கே இப்படிச் செய்தால் பட்ட மரத்திற்கு என்னதான் செய்யமாட்டார்கள்? (லூக் 23:31)

 தேவனை வணங்குவோர் (God Fearers) என்னும் வேறே ஆடுகள்

தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.  அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். (அப்போஸ்தலர் 16:14,15) ஆதி திருச்சபையில் இந்த லீதியாள் போல தேவனை வணங்குவோர் என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்து வந்தனர். யூதரின் ஒரே தேவனை அவர்கள் பயத்தோடு வணங்கி வந்தனர். ஆனால் இவர்கள் விருத்தசேதனம், திருமுழுக்கு பெறாதவர். இவர்களை யூத விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளாததை லீதியாள், “நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால்’ என்று கூறியதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

லீதியாள் போன்ற இப்படிப்பட்ட ‘வேறே ஆடுகளின்’ கூட்டத்தில் அப்போஸ்தலர் புத்தகத்தில் நாம் காணும் எத்தியோப்பிய மந்திரி (8: 26-39) கொர்நேலியு போன்றோரும் அடங்குவர் (10:1,2). இவர்களைக் குறித்து பவுலும் “ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது” (அப் 13: 16, 26) என்று இயேசுவின் ஒரே மந்தைக்குள் அவர்களை இணைத்துக்கொள்ளுவதைப் பார்க்கலாம்.

ஆடுகளும் நாமே, மேய்ப்பரும் நாமே

‘என் ஆடுகளை மேய்ப்பாயாக’ (யோவான் 21: 15-17) என்ற இயேசுவின் அன்புக் கட்டளையை பெற்ற அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு கொடுக்கும் கட்டளை என்ன? “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.  அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.” (1 பேதுரு 5:2-4).

இந்த ஒரே மந்தைக்குள் நாம் கொண்டு வரும் ‘பிற ஆடுகள்’ நம் வாழ்வில் இன்று எத்தனை பேர்?

 

 

Tuesday, June 21, 2022

அனுபவ சாட்சியும், படிப்பினைகளும்

 


இலங்கை தேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, எங்கும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த கொந்தளிப்பான நேரத்தில் எனக்கும்  என் கணவர் சுரேஷுக்கும் அங்கிருந்து ஊழிய அழைப்பு வந்தது. இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியாவில் உள்ள எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் எங்களை வேண்டிக்கொண்டனர். ஒரு சமூக ஊடக இடுகையின் மூலம் கடவுள் எங்களுக்கு தூண்டுதலைக் கொடுத்தார். அதன் பிறகு நாங்கள் எங்கள் பிரயாணத்தை மேற்கொண்டோம்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, உள் இடங்களுக்குச் செல்லும் அசௌகரியமான பயணம் போன்றவற்றில் மக்கள் படும் வேதனைகளையும் துன்பங்களையும் நாங்களும்  அனுபவித்தோம். இவை அனைத்தையும் தேவ தயவால் மேற்கொண்டு, அத்தீவு தேசத்தில் ஊழியத்தில் நற்பலன்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் உறவினர்களில் ஒருவரான ஆங்கிலிக்கன் பாதிரியார் ஒருவர் வந்து எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலைப்பாங்கான இடத்தில் உள்ள அவரது தேவாலயத்தில் நாங்கள் பேசுவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக எங்களால் அவரது இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

கர்த்தர் எங்களுக்கு ஒரு மாற்று திட்டத்தை வைத்திருந்தார். இலங்கையில் எங்கள் கூட்டங்களின் போது நாங்கள் சந்தித்த ஒரு போதகர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள அவரது தேவாலயத்தில் இரண்டு ஆராதனைகளில் பிரசங்கிக்க எங்களை அழைத்தார். என் கணவர் முதல் ஆராதனையில் பிரசங்கம் செய்துவிட்டு, வேறொரு சபைக்குச் சென்று அங்கும்  தேவ செய்தி அளித்தார். அங்கே போதகரின் மனைவி உட்பட பலரது இதயங்களை கர்த்தர் அன்று உயிர்ப்பித்தார். நான் முதல் சபையில் இரண்டாவது  ஆராதனையில் பிரசங்கித்த பிறகு, இறை வார்த்தைகளைக் கேட்டு மக்கள் எப்படி தொடப்பட்டார்கள் என்று சொன்ன போது தேவன் மகிமைப்பட்டார். மக்கள் குணமடைய பிரார்த்தனைகளையும் ஏறெடுத்தேன். அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையாக அமைந்தது.

 இதற்குப் பிறகு நாங்கள் இருவரும் போதகரின் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலில் உணவுக்காக சென்றோம். சாப்பிட்டு மகிழ்ந்தோம்.  அப்போது என் கணவர் கை கழுவச் சென்றபோது, ​​திடீரென மூர்ச்சை அடைந்தார்.  மூளையதிர்ச்சி போல் இருந்தது. எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வந்தது.

போதகரின் குடும்பத்தினர் மற்றும் ஹோட்டலில் இருந்த உதவும் உள்ளம் கொண்ட அந்நியர்களின் உதவியோடு என் கணவரை டாக்ஸியில் ஏற்றிச் சென்றோம்.  ஞாயிற்றுக் கிழமை ஆனதால் கிளினிக்குகள் மூடப்பட்டிருந்தன. இறுதியாக, இரண்டு செவிலியர்கள் இருந்த ஒரு கிளினிக்கிற்கு என் கணவரை தூக்கிச் சென்றோம்.  அப்போது என் கணவருக்கு சர்க்கரை அளவு 600க்கு மேல் இருந்ததை கண்டுபிடித்தனர். காலையில் உணவு உண்ணாமல் இருந்ததன் விளைவும், அன்றைய தினம் அவர் சர்க்கரை மருந்துகளை எடுக்காமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தேன்.

முந்தைய நாட்கள் பரபரப்பாகவே இருந்தது. அந்த சனிக்கிழமை இரவும் என் கணவர் ஒரு மணி நேரம் மாத்திரமே தூங்கி இருந்தார். அவர் பிரசங்கித்த இரண்டாவது தேவாலயத்தில் கரண்ட் இல்லாததால், அவர் அதிகமாக வியர்த்து, நீரிழப்புக்கு ஆளானார். இருந்தாலும் நல்ல மருத்துவமனை கிடைக்கவும், முறையான சிகிச்சை கிடைக்கவும் கடவுள் வழி நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருந்தேன். நான் என் வாயைத் திறந்து சத்தமாக ஜெபித்துக்கொண்டே இருந்தேன். அப்பொழுது டாக்ஸி கொழும்பில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை முன் நின்றது. அவருக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.


சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருக்கு மூளையில் சிறிய ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்று கூறினார்கள். அவரை அழைத்து வர தாமதித்திருந்தால் அவர் கோமா நிலைக்குச் சென்றிருக்கலாம் என்றும் கூறினர். ஐசியூவில் அவர் கண்காணிக்கப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் பிரார்த்தனைகளை கர்த்தர் கேட்டார். ஆஸ்பத்திரியில் எனக்கு ஒரு தனியான தருணம் அமையவே இல்லை. அந்த அந்நிய தேசத்தில் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நான் சூழப்பட்டிருந்தேன். எங்கள் மகன், கிஃப்ட்சனும் இந்தியாவிலிருந்து வந்து, மகிழ்ச்சியுடன் மூவருமாக இந்தியாவுக்குத் திரும்பினோம்!


எங்களது ஊரான கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட  தொடர் மருத்துவப் பரிசோதனையில் கணவரின் உடல்நிலை சரியாக இருப்பதாகத் தெரியவந்தது. உடனடியாக இந்தியாவின் நாக்பூரில் நடந்த ஒரு வேதாகம மொழிபெயர்ப்புப் பட்டறையிலும் கலந்துகொண்டோம். வேலூர் CMC-யில் இன்னும் சில மருத்துவ ஆலோசனைகளையும் தொடர்ந்து இறைபணி செய்வதற்கான ஊக்கத்தையும் பெற்றோம்.

கர்த்தர் நல்லவர், எந்த சூழலிலும் அவர் நல்லவர். இந்த அனுபவ சாட்சியின் மூலம் எங்களது கற்றல் மற்றும் எச்சரிக்கைகளில் சிலவற்றை இங்கே தருகிறேன்:

1.  இந்த சடிதியான சுகவீனத்திற்கு ஒரு முக்கிய காரணம் எங்கள் வீட்டில் இருந்த ஒரு பிழையான சர்க்கரை மானிட்டர். இதில் பயன்படுத்தப்பட்ட கீற்றுகள்(strips) காலாவதி தேதியை கடந்துவிட்டன. அது எப்போதிலிருந்து தவறான எண்ணிக்கைக் காட்டியது என்பது எங்களுக்குத் தெரியாது. இலங்கைக்கு செல்வதற்கு முன் என் கணவர் தனது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதி மகிழ்ச்சியாக இருந்தார். அது உண்மையல்ல. அதே பிழையான எண்ணை வீட்டுக்கு வந்த பிறகும் காட்டும் போது தான் தவற்றை உணர்ந்தோம்!

2. வீட்டிற்கு வெளியே நீண்ட தினங்கள் தங்கியிருக்கும் பிரயாணங்களின் போது சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது அளவிட இந்த மானிட்டர்களை எடுத்துச் செல்வது நல்லது.

3. சரியான ஓய்வும், உறக்கமும் கட்டாயம் அவசியம்.

4. என் கணவர் தனது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்து, அங்குள்ள வெப்பமான தட்பவெப்பநிலையின் காரணமாக குளிர்ந்த சர்க்கரை அதிகமுள்ள சோடாக்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை அதிகம் பருகினார். குளிர்ந்த நீரை பருகியிருக்கலாம்.

5. சரியான வேளையில் உணவு மற்றும் சரியான வேளைகளில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்

 இப்போது எங்கள் ஊழிய பயணங்களை ஞானமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இளம் ஊழியர்களை பயிற்றுவிக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் எங்கள் அன்பும் பிரார்த்தனைகளும்!

 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்? நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகளெல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.  (பிரசங்கி 7:16-18)

Friday, June 10, 2022

Blessings of the Pentecost

 

Picture Courtesy: Catholic Teacher Resources

The almanac readings during the celebration of Pentecost Sunday last week led me to think about the blessings of the first Pentecost event of the early church found in Acts 2. I will share few of my thoughts here.

Unity

The psalmist said, “How good and pleasant it is when God’s people live together in unity...For there the Lord bestows his blessing” (Psalm 133:1) The believers, 120 of them were meeting together in one place. (Acts 1:15, 2:1) The Spirit of the living God chose to descend on this group of believers who were obedient to the command of Jesus and were praying in unison. (Acts 1:5, 14) Did not Jesus say earlier, “For where two or three gather in my name, there am I with them”? (Mathew 18:20)

Community

Unlike the Old Testament times where the Spirit of God would descend on individuals, here for the first time the Holy Spirit descended on a group of believers, on a community, in an inclusive manner in fulfilment of Joel’s prophecy: And afterward, I will pour out my Spirit on all people. Your sons and daughters will prophesy, your old men will dream dreams, your young men will see visions. Even on my servants, both men and women, I will pour out my Spirit in those days. (Joel 2:28,29) This group of believers were of all kinds, comprising of both men and women. (Acts 1:14)

Has not Apostle Peter included us when he said, “But you are a chosen race, a royal priesthood, a holy nation, a people for His own possession, that you may proclaim the excellencies of Him who called you out of darkness into His marvelous light”? (1 Peter 2:9)

Evangelism

The gift of tongues spoken by the believers that day was a miracle that led to giving the gospel in their respective languages to the ready-made audience there. There were God-fearing Jews from every nation under heaven that could hear them. (v.5) The world was in the nearest vicinity for the disciples. Unlike many cases where we travel miles to share the good news to people here it was a God-ordained global crowd at the footstep of the upper room!

Gift of Tongues

Interestingly the strange language that came upon the believers was understood by the people from nearly 16 different nations and linguistic contexts. (v. 9-11) What did they say? “We hear them declaring the wonders of God in our own tongues!” (v.11) This is the only place where the gift of tongues was understood this way in the book of Acts! How can we repeat such a language-miracle in our context today?

When Cameron Townsend was working in Guatemala as a missionary, these words were spoken by a Cakchiquel Indian which eventually changed his life. These were those words: “If your God is so great, why doesn’t he speak my language?” Townsend abandoned his attempts to sell Bibles and began living among the Cakchiquels. He learned their complex language, created an alphabet for it, analyzed the grammar, and translated the New Testament in a remarkably short span of ten years.

We too can be the tools today in helping people declare the wonders of God in their tongues by giving the Bible in the people’s mother tongues.

Picture Courtesy: Wycliffe Associates

Multitudes

What was the result of Peter’s preaching during the Pentecost event? About three thousand were added to their number that day. (v.41) The book of Acts thereafter is about numbers, growth, multiplication of believers and churches. Multitudes is also the final blessing we look forward to! Apostle John records that blessing: After this I looked, and there before me was a great multitude that no one could count, from every nation, tribe, people and language, standing before the throne and before the Lamb. They were wearing white robes and were holding palm branches in their hands. (Rev 7:9)

I wish and pray that we would inherit these blessings and be a blessing to the multitudes around us!

 

Wednesday, May 18, 2022

Learnings & Warnings

 

Suresh and I got an invitation from Sri Lanka in a turbulent time when the nation was facing a huge economic crisis and was involved in protests everywhere. We were discouraged by family, friends in India not to make this trip. God gave some prompting in us through a social media post after which we booked our tickets happily.

In Sri Lanka we tasted the pain and the suffering the people were undergoing in the areas of shortage of food, power-cuts, uncomfortable travel to interior places and so on. With all these, the primary purpose of our visit to the island-nation could be achieved. We were glad. One of our relatives, an Anglican priest was supposed to come and take us to his house. He had also planned for us to speak in his church in a hilly place on Sunday, the 24th of April. But due to shortage of fuel and related problems, we could not go to his place.

God had an alternate plan for us. One pastor whom we met during our meetings in Sri Lanka invited us to preach in her church in Colombo in two services on the Sunday. Suresh preached in the first service and moved on to another church where he was invited to preach too. God revived many hearts including the pastor’s wife there. Praise God. After I preached in the second service there were people lining up to say how they were transformed hearing God’s words. There were prayers for healing too. It was a blessed Sunday. After this we went for fellowship over food in a hotel with the pastor’s family. We enjoyed the meal and fun. While going to wash his hands, Suresh had a cerebral attack suddenly. It came with no symptoms.

Somehow with the help of the pastor’s family and strangers in the hotel we managed to carry Suresh to a taxi. To our shock, clinics were closed. Finally, we carried my husband to a clinic where there were two nurses. They found that his sugar level was 600 plus. I realized that it could have been the result of him not taking food in the morning and his forgoing of sugar medications that day. The previous days were hectic. Suresh had an hour’s sleep on that Saturday night. With no current in the second church he preached, he had sweated profusely and had got dehydrated. However, I was praying that God should guide us to a good hospital and for a proper treatment. I opened my mouth and kept praying in the entire ordeal, no silent prayer! Praise God, we could bring Suresh to a very big hospital in Colombo. Immediate medical care was given to bring down his sugar level.

A CT scan revealed that he had a small blood clot in the brain. Doctors said not to panic and that the clot could be healed by medicines. I was also told that had we delayed in bringing him in he could have gone into a coma. He was monitored in the ICU. God heard the prayers of saints around the world. There was not one solitary moment for me in the hospital. I was always surrounded by friends and relatives in that foreign land. Our son, Giftson flew in too. Praise God. We retuned to India with happiness and joy! 

Another series of medical investigations in Coimbatore revealed that Suresh’s vitals are perfectly okay. Praise God that we could even make it to a Bible translation workshop that happened in Nagpur, India immediately after we flew in. We are looking forward to having some more medical advice at CMC, Vellore in the coming week.

God is good, all the time!

Here are some of our learnings and warnings:

  1. One main culprit in this episode was an erroneous sugar-monitor that was in our house. The strips used in this had crossed the expiry date. We do not know from when it showed wrong readings. Prior to going to Sri Lanka, Suresh was happy to know that his sugar was under control. It was not true. We realized that only after coming home because it showed the same erroneous reading!
  2. It is good to carry these monitors, not the faulty ones, to measure sugar and pressure periodically during long stays outside of home.
  3. Proper rest is a must.
  4. Suresh thinking that his sugar was under control, indulged in drinking cold sugary sodas, juices all through his trip because of the hot climate there. Cold water could have been the option!
  5. Diabetics must really care for a proper diet and periodical medicines.
  6. Last but not the least, equip and empower the next generation to take the mantle.

Now we have decided to run our race steadily and wisely. Keep us in your prayers. Our love and prayers to you as well!

Do not be overly righteous, and do not make yourself too wise. Why should you destroy yourself? Do not be excessively wicked, and do not be a fool. Why should you die before your time?  It is good to grasp the one and not let the other slip from your hand. For he who fears God will follow both warnings. (Ecclesiastes 7:16-18)