Wednesday, March 30, 2011

The Theology of Beauty

Few years back, I was shocked to know that the “Miss India” title in India was won by the daughter of a pastor and his ministry minded wife of a reputed church. Why does one contest for beauty? How do you measure beauty? What do you look for in a person? What is our world view on beauty? Why do many girls (more than boys!) lose their value in the marriage market in India and elsewhere, only because they are not “beautiful?” And can one look as beautiful as they are, forever?

What does the Bible tell about the beauty of a person? I find that just like any progressive revelation in the Bible “the beauty theology” is also progressive. In the Old Testament in many places we find men and women being described as beautiful and handsome. Following are few examples: Bible describes Rachel as one who was lovely in form and beautiful (Genesis 29:17). Esther is being described as fair and beautiful (Esther 2:7). Even men were measured for their looks in the Old Testament.  2 Samuel 14:25 says: “In all Israel there was not a man so highly praised for his handsome appearance as Absalom. From the top of his head to the sole of his foot there was no blemish in him.” It would be incomplete if I do not mention the following verse also, which concludes the beauty issue in the Old Testament. For, Proverbs 31:30 says “Charm is deceptive, and beauty is fleeting; but a woman who fears the LORD is to be praised.” Is not the fear of the Lord more important than the outward beautiful look?

Now coming to the New Testament, is there any mention of a Mary or a Paul being described as how they looked? Has Jesus ever been described as how handsome he looked either? Jesus, hanging on the cross on the contrary has been described as one who had no beauty or majesty to attract one to him. And there was nothing in his appearance that one should desire him (Isaiah 53:2). We find Peter the apostle, who rightly concludes the beauty issue this way: “Your beauty should not come from outward adornment, such as braided hair and the wearing of gold jewelry and fine clothes. Instead, it should be that of your inner self, the unfading beauty of a gentle and quiet spirit, which is of great worth in God's sight.” (1 Peter 3:3, 4)

So what’s the priority -“the inner beauty” or the “outer beauty?” The Bible tells us that our body is the temple of the living God (1 Corinthians 6:19). Therefore it is our bounden duty to keep our bodies healthy and good looking. But we are not called to prioritize that by risking our inner beauty. The inner beauty of ours is achieved by a genuine fear of God. To fear the Lord is to hate evil (Proverbs 8:13) How do we hate evil? It is only possible by yielding our inner self to a God who is capable to help us hate evil. I believe that my inner beauty is offered by Jesus. He offers it to all who ask for it. I wish to grow in the unfading beauty of a gentle and quiet spirit which is of great worth in God’s sight. The beauty theology also offers me and the believers of the Bible, a paradigm shift in our thinking about the existing world view of what beauty is all about!

Friday, March 18, 2011

"நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக"


யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மரிக்க வேண்டும்-என்பது பலரது ஜெபமாக இருக்கும். வேதத்தில் ஒரு மனிதன் இவ்வாறாக ஜெபம் செய்தான்: "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக." அவன் நீதிமானாக மரித்தானா? வேதத்திலே பலர் நீதிமான்களாக வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிமானாக மரிக்க ஜெபித்தவனைப் பற்றியும், நீதிமானாக வாழ்ந்த ஒரு சிலர் பற்றியும் வேதத்திலிருந்து காண்போம்.

பிலேயாம் 

"நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக" என்று ஜெபித்தவன் பிலேயாம் (எண்ணாகமம் 23:10). ஆனால் அவன் நீதிமானாக மரிக்கவில்லை." இஸ்ரவேல் புத்திரர் பாலாம் (பிலேயாம்) என்னும் குறி சொல்லுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டார்கள்" என்று யோசுவா 13:22 கூறுகின்றது. அவன் மரித்து பல வருடங்கள் கழித்து பேதுரு அப்போஸ்தலன் "அநீதத்தின் கூலியை விரும்பினவன்" என்று பிலேயாமைப் பற்றிக் கூறுகின்றான் (2 பேதுரு 2:15). யூதா தான் எழுதிய சிறிய நிருபத்தில் பிலேயாமை "கூலிக்காக வஞ்சகம் செய்தவன்" என்றுக் குறிப்பிடுகின்றான் (வ்.11). பெர்கமு சபையிலே பிலேயாமின் தவறான கொள்கையை கைக்கொள்ளுகிறவர்களை இயேசுக் கிறிஸ்து வெறுப்பதாக யோவான் எழுதி வைத்துள்ளான் (வெளிப்படுத்தின விசேஷம் 2:14).

பிலேயாம் இயேசுக் கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகையைப் பற்றி முன் மொழிந்தவன் ஆவான் (எண்ணாகமம் 24:17). "யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்" என்ற அவனது தீர்க்கதரிசனத்தை வைத்து, பாலன் இயேசுவை ஞானியர் காண வந்தனர் என்று வேத அறிஞர் கூறுகின்றனர். "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல; மனம் மாற அவர் ஒரு மனுப்புத்திரனும் அல்ல," (23:19) என்று வசனம் பேசியவன் இப்பிலேயாம் தான். "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை" என்று வல்லமையாக முழங்கினவனும் இவனே. அப்பேர்ப்பட்ட பிலேயாம், மோவாபிய ராஜாவாகிய‌ பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை சபிப்பதற்காக பேசிய‌ பணம், மற்றும் வசதிகளுக்காக அவர்களை பாவம் செய்ய வைக்கிறான். இதைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுக் கிறிஸ்துவே கூறுகின்றார். "விக்கிரகளுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாக போடும்படி பாலாக் என்பவனுக்கு பிலேயாம் போதனை செய்தான்"(வெளிப்படுத்தின விசேஷம் 2:14). இப்பாவங்களை செய்ததால் கர்த்தரிடத்திலிருந்து தண்டனைப் பெற்று, வாதையால் செத்த இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை 25,000 என்று வேதம் சொல்லுகின்றது (எண்ணாகமம் 25:9). "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக" என்று ஜெபித்த பிலேயாம் நீதிமானாக வாழாமல், அவன் வாழ்ந்த காலம் துவங்கி ஆதித்திருச்சபையான பெர்கமு சபையின் காலம் வரை பலர் இடறிப் போக காரணமாகி விட்டான்.

நியாயத்தீர்ப்பின் நாளிலே, "கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா?" என்றுக் கேட்போருக்கு "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" (மத்தேயு 7:22,23) என்று இயேசுக் கூறும் நபர்களில் பிலேயாம் போன்றவர் அடங்குவர். பிலேயாம் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? ஒருவர் ஜெபிப்பதாலோ, தீர்க்கதரிசனம் உரைப்பதாலோ, வசன ஊழியம் செய்வதாலோ நீதிமானாக மாற முடியாது. நீதிமானாக மரிக்க நீதிமானாக வாழ வேண்டும் என்பதே உண்மையாகும்.

ஆபேல்

ஆபேலை இள வயதிலேயே அவன் சொந்த சகோதரனான காயீன் கொலை செய்து விடுகின்றான். அநியாயமாய் கொலை செய்யப்பட்ட இந்த ஆபேலை இயேசுக் கிறிஸ்து "நீதிமான்" என்றுக் குறிப்பிடுகின்றார் (மத்தேயு 23:35). எபிரேய புத்தக ஆக்கியோன், ஆபேல் காயீனை விட மேன்மையான பலியைச் செலுத்தினதாலே நீதிமான் என்று சாட்சிப் பெற்றதாக விளக்கம் கொடுக்கின்றான் (எபிரேயர் 11:4). அப்போஸ்தலனாகிய யோவானும் ஆபேலின் கிரியைகள் நீதியானவைகள் என்றுக் குறிப்பிடுகின்றான். பொல்லாங்கனால் உண்டாயிருந்து பொல்லாத கிரியைகள் புரிந்த காயீனைப் போல் இருக்க வேண்டாம் என்று நம்மை எச்சரிக்கின்றான் (1 யோவான் 3:12). காயீனுடைய வழியும், சபைகளிலே கள்ளப் போதர்களின் வழியும் நல்லதல்ல என்று யூதாவும் எச்சரிக்கின்றான் (யூதா 1:11).

இப்படியிருக்க‌, இச்சகோதரர் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? செயலில் நீதிமானாக வாழ்பவனே நீதிமான் அல்லவா? ஒருவனை நீதிமான் என்று மற்றவரும், குறிப்பாக ஆண்டவரும் சாட்சி கொடுக்க வேண்டும் அல்லவா?

நோவா

"இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்," என்று நோவாவைக் குறித்து ஆண்டவரே சாட்சிக் கொடுக்கின்றார் (ஆதியாகமம் 7:1). ஆதியாகம புத்தக ஆக்கியோனும், "நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்கே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்," என்று அறிமுகம் செய்து வைக்கின்றான் (6:9). எபிரேயப் புத்தக ஆக்கியோன் நோவா நீதிமானாக கருதப்பட்டதன் விவரத்தை இவ்வாறு கூறுகின்றான்: விசுவாசத்தினாலே நோவா......தேவ எச்சரிப்பு பெற்று பய பக்தியுள்ளவனாகி தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையை உண்டு பண்ணினான். அதினாலே அவன்..... நீதிக்கு சுதந்தரவாளியானான் (எபிரேயர் 11:7). அப்போஸ்தலனாகிய பேதுரு, "நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா" என்று நோவாவை பிரசங்கியாராக விமர்சிக்கின்றான் (2 பேதுரு 2:5). உலகின் முதல் பிரசங்கியாரான நோவா, இவ்வுலகம் முழுவதையும் ஆதாயப் படுத்துவதில் தோல்விக் கண்டாலும் தன் சொந்தக் குடும்பத்தை ஆதாயப்படுத்திக் கொண்டான். அதினாலே அவன் நீதிமான் ஆகின்றான்.

இன்று உலகம் முழுதையும் ஆதாயம் பண்ணுவதில் நாட்டம் காட்டும் பலர் தங்கள் சொந்தக் குடும்பத்தை ஆதாயம் பண்ணிக் கொள்ள முடியாமல் போவது ஏன் என்று சிந்தித்துப் பார்ப்பது நலம். நீதிமானின் குடும்பம் அந்த நீதிமானால் இரட்சிக்கப்பட்டு நித்திய அழிவினின்று காக்கப்படும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மையாகும். நீதிமானின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு (சங்கீதம் 118:15) என்பது உண்மையன்றோ?

முடிவாக தங்களை நீதிமான்களென்று எண்ணி, மற்றவர்களை அற்பமாக எண்ணுவதும் தவறாகும். அப்படிப்பட்டோருக்கு இயேசுக் கிறிஸ்துவின் தீர்ப்பு பற்றிய அறிவு அவசியம். அவர் நியாயப்பிரமாணம் முழுமையும் கைக்கொண்ட பரிசேயனை நீதிமான் என்று அழையாமல், "பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்" என்று ஜெபித்த ஆயக்காரனையே "நீதிமான்" என்று தீர்ப்பு செய்கின்றார் (லூக்கா 18:9௧4). இலவசமாய் கிடைக்கும் தேவ கிருபையை விசுவாசத்தினால் பெற்று, பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று பரிசுத்தமாய் வாழ்பவர்களே நீதிமான்கள். அப்படிப்பட்டோர் தான் நீதிமான்களாய் மரித்து நீதியின் கிரீடத்தைப் பெற முடியும். நீதிமானாக மரிக்க நீதிமானாக வாழ வேண்டும் அன்றோ?

Am I a Stumbling Block or a Stepping Stone?


Children are looking for role models today. For them a role model could be a film star, a sports star, or sometimes a popular personality like a teacher. But how many would say that their parents are their role models-is a question to be bothered.  Out of the crowd Jesus brought a child to the centre and said, “If any of you put a stumbling block before one of these little ones who believe in me, it would be better for you if a great millstone were fastened around your neck and you were drowned in the depth of the sea. (Matt 18:6 [NRSV])

The “little ones” could literally mean a little child or could mean spiritual babes who are growing in faith. "Stumbling blocks" are the sins of ones which make the young ones in turn to sin. The judgment Jesus offers to such offenders is so severe. Now that indicates the seriousness of being a stumbling block in young people’s lives.

I wish to open up the parental problem of being stumbling blocks to children from the lives of Eli and David in the Bible.

Eli was a stumbling block (1 Samuel 2-4)

Eli, a priest of the temple that day can portray a pastor or a spiritual leader today. His sons Hophni and Phinehas coveted the offering that came to the temple treasury. They coveted also women who came there for offering service in the temple. The sons of Eli exploited such women sexually.  Eli reproved his sons initially but to no effect (1 Samuel 2:23-25). But the truth was: the whole of the priestly family fattened themselves by exploiting the offerings. In this way Eli honoured his sons more than God (1 Samuel 2:29). Though Eli knew the consequences of such sinful acts, the Bible tells, he failed to restrain his sons who made themselves contemptible (1 Samuel 3:13). Eventually the consequences for such grievous offences were so severe. The following incidents took place on one single day (1 Samuel 4):
  1. The sons of Eli, Hophni and Phinehas died in a war.
  2.  The pride of the nation, “the ark of God” was seized by the enemy nation.
  3.  Hearing the death of his sons and the seizure of the ark of God, old Eli fell off his chair, broke his neck and died.
  4. On hearing the news of the death of Phinehas, his pregnant wife who was nearing her delivery time, delivered child. But she died.

This is why Jesus said, “Woe to the man by whom the stumbling block comes!” (Matthew 18:7)

David was a stumbling block (2 Samuel 11-19)

David misused his power as a King and sexually exploited Bathsheba. In this self-indulging pursuit he plotted the death of her husband, Uriah, a righteous man. David repented for his sins and did not repeat them again. But as consequences of his sin there was chaos in his family. He became a stumbling block to his own children in the following situations, which fully went out of his control:
  1.  The child born out of David’s sin with Bathsheba died.
  2.  Amnon raped Tamar, an innocent girl and drove her out mercilessly. (David  was the father of both, but their mothers were different)
  3.  This triggered Absalom, brother of Tamar. He became ferocious and murdered Amnon.
  4.  David’s effort to bring justice aggravated the situation. Absalom rose against his own father.
  5.  David had to walk away from his palace bare footed to escape the fury of his son.
  6.  David’s sin with Bathsheba was in secret. But Absalom did the same offence in open with the concubines of David in broad day light.
  7.  Except for a few, the whole nation rose against Absalom. The army of David chased Absalom in a battle. In an attempt to save his life,  he fled in his mule. His long hair got struck to a tree. While he was hanging, the army commander speared him to death.

Because of his sin, David did not have control over the life of his children. His children suffered blood-shed, deaths and unjust events. He became a stumbling block in the lives of his children.

Jesus not only said that such offenders needed to be drown in the depths of the sea, but also goes to the extent that the bodily organ which causes to sin say, hands, feet, eyes be removed, according to Matthew 18:1-9. Can Jesus be that unkind to an offender? Jesus loves sinners. That was why he took such offences on his behalf and died on the cross. So Jesus is one who hates sin but one who is kind to the sinners. Jesus concludes the subject, “It is better for you to enter life maimed or lame than to have two hands or two feet and to be thrown into the eternal fire. It is better for you to enter life with one eye than to have two eyes and to be thrown into the hell of fire” (Matthew 18:8-9). David received grace for he trusted in the saving power of God and in eternal life. Now, what  is that I want to be – a stumbling block or a stepping stone in one’s life?

Wednesday, March 16, 2011

குறுக்குப் பாதையா? குறுகிய பாதையா?



நாம் வாழும் இவ்வுலகில் குறுக்குப் பாதையில் சென்று காரியம் சாதிப்பவர் பலர். வட்டிக்குப் பணத்தைக் கொடுத்தும், கள்ள வியாபாரம் செய்தும் "திடீர் பணக்காரர்" ஆவோரைக் குறித்து சத்திய வேதம் சொல்வது என்ன?

மத்தேயு 4:1-11 வசனங்களில் இயேசு கிறிஸ்து சாத்தானை மேற்கொண்ட முறைகளை ஆதாரமாக வைத்து இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் காணலாம். இச்சம்பவத்தில் இயேசு ஆவியானவராலே பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார் என்று வாசிக்கிறோம். இதற்கு முந்தின அதிகாரத்தின் கடைசி வசனத்தில் பிதாவினால் இயேசுவிற்கு கிடைத்த புகழாரத்தையும் காணலாம்: "இவர் என்னுடைய நேசக் குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்." "ஒரு மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை," என்பது இது தானோ?

சோதனை 1: 
குறுக்குப் பாதையில் உடலின் தேவைகளை ந்திக்கலாமா?

நாற்பது நாள் உபவாசம். மனித ரூபத்தில் வந்த தேவக் குமாரனாகிய இயேசுவுக்கு சரியான பசி.அவ்வேளையில் சாத்தான் அவரிடம் வந்து, "நீர் தேவனுடைய குமாரனானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்," என்றான். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? தான் தேவனுடைய குமாரன் தான் என்று நிரூபிக்க, யாரும் இல்லாத வனாந்தரத்தில் இயேசு கல்லுகளை அப்பங்களாகும்படி எளிதாகச் செய்திருக்கலாம். ஆனால் தனது உடலின் தேவைகளை சந்திக்க இயேசுவானவர் குறுக்குப் பாதையை தேர்வு செய்யாமல், குறுகிய பாதையை தேர்வு செய்து பசியோடிருந்தார். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்," என்று பதில் கூறினார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது: ஒருவரும் பார்க்காத வேளையில், நம் உடலின் தேவைகளை சந்திக்க திருடுதல், பாலுணர்வுத் தவறுகளில் ஈடுபடுதல், வேசித்தனம் செய்தல் போன்றவை குறுக்குப் பாதையை தேர்வு செய்வதாகும். "ஜீவனுக்குப் போகும் பாதை இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கும். அதைக் கண்டுப்பிடிக்கிறவர்கள் சிலர்," என்று மத்தேயு 7:14 கூறுகின்றது. லாசரு பசியோடிருந்து குறுகிய பாதையில் சென்றாலும் மோட்சம் சென்றதாக வேதம் கூறுகின்றது. எனவே மரணமே நேரிட்டாலும், உடலின் தேவைகளை சந்திக்க குறுக்குப் பாதையை தேர்வு செய்யக் கூடாது.

சோதனை 2:
குறுக்குப் பாதையில் சாதனையை நாடலாமா?

மத்தேயு 4:5 ல், பிசாசு இயேசுவை தேவாலயத்து உப்பரிகையின் மேல் நிறுத்தி, "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழ குதியும். ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது பாதம் கல்லில் இடறாதபடி அவர்கள் உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள்," என்று கூறினான். தேவ ஆலயத்தில் எல்லாரும் பார்க்கக் கூடிய இடத்தில், 'மேலிருந்து தாழக் குதிக்கும்' மாபெரும் சாதனையை இயேசு செய்திருக்கலாம். ஆனால்அற்புத மூர்த்தியானஅவர் அச்சாதனைக்காக் குறுக்குப் பாதையை நாடாமல், தம்முடைய பிதாவிற்கு மாத்திரமே கீழ்படிந்து அவர் வேளைக்குக் காத்திருந்தார். மேலும் வசனத்தை துர்ப்பிரயோகம் செய்த பிசாசை வசனத்தைக் கொண்டே சாடினார். "உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சைப் பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே," என்றார்.

வசனத்தை துர்ப்பிரயோகம் செய்து, நமக்கு நாமே தவறான  நெறிமுறையை வைத்துக் கொண்டு, படிப்பில், வேலை ஸ்தலத்தில் மற்றும் ஊழியத்தில் சாதனை புரிய காப்பியடித்து, இலஞ்சம் கொடுத்து, மற்றவர் வாழ்வைக் கெடுத்து- இது போன்ற‌ குறுக்குப் பாதைகளில் சென்று எல்லாரும் பார்க்கும் வண்ணம் சாதனைப் புரிவது தவறாகும். தானியேல்வேலை ஸ்தலத்தில் உண்மையாக இருந்ததனால் (தானியேல் 6:4) சிங்கக் குகையென்னும் குறுகிய பாதையில் சென்றான். ஆனால் கர்த்தர் அவனை ஏற்ற வேளையில் பிரதம மந்திரியாக உயர்த்தினார்!  எனவே சிங்கக்குகை போன்ற அனுபவம் நேரிட்டாலும், குறுக்குப் பாதையில் சென்று உலகறிய சாதனை பெற நாடக் கூடாது.

சோதனை 3: 
குறுக்குப் பாதையில் உயர் பதவியை நாடலாமா?

மத்தேயு 4:8-9 வசனங்களில் பிசாசு, இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டு நிறுத்தி, உலகத்தின் இராஜ்ஜியங்களைக் காட்டி, "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்துக் கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன்" என்றான். பிசாசு பொய்யன். தந்திரக்காரன். அவன் உலகத்தின் அதிபதியாக (யோவான் 16:11) இருந்தாலும், உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4) என்பதற்கு நிரூபணமாக, "அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்று இயேசு கூற சாத்தான் மறைந்து போகிறான்.

பதவியும், அந்தஸ்தும் வேண்டும் என்பதற்காக அரசியல்வாதி மற்றும் பெரிய மனிதர் காலில் விழுந்து குறுக்கு வழியில் பதவியை நாடி ஓடக் கூடாது. இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் குறுகிய பாதையையே தேர்வு செய்து, சொல்லொண்ணாப் பாடுகள் பட்டு தம்முடைய ஜீவனை சிலுவையில் ஈந்ததால் தான், தேவன் எல்லாப் பதவிக்கும் மேலான அதிகாரத்தை அவருக்கு கொடுத்தார் (பிலிப்பியர் 2:6‍‍-11). எனவே சிலுவைப் போன்ற கஷ்டம் வந்தாலும், குறுக்குப் பாதையில் சென்று பதவியை நாடக் கூடாது.

பிசாசின் வழி சுலபமானதும், அகன்றது போலக் காணப்பட்டாலும் அது கேட்டுக்குப் போகும் குறுக்குப் பாதையாகும். உத்தமமானதும், மேன்மையானதுமான  வேதத்தின் வழி கடினமாதானாலும், குறுகிய பாதையான அதையே தேர்வு செய்து, கர்த்தருக்குச் சித்தமானால் இவ்வுலகில் தானியேலைப் போன்ற மேன்மையையும், இல்லையெனில் லாசருவைப் போல கட்டாயமாக நித்தியத்தில் மேன்மையையும் பெறுவோம்.

Monday, March 14, 2011

பாதம் ஒன்றே வேண்டும்!



பெற்றோர் மற்றும் பெரியவர்கள் பாதத்தில் விழுவது நம் நாட்டில் பரவலாக காணப்படும் கலாச்சாரங்களில் ஒன்றாகும். காரியம் ஆக வேண்டுமானால் யார் காலிலும் விழத் தயார் என்பது இன்றைய நாட்களில் சகஜமானதும் ஆகும். ஆனால் வேதத்திலே மரியாள் அறிந்து வைத்திருந்த பாதம் அது இயேசுவின் பாதம் ஒன்றே என்றால் அது மிகையாகாது. மூன்று முறை அவள் இயேசுவின் பாதத்தைக் கண்டாள். அம்மூன்று முறையும் அவள் செயல்கள் உணர்த்திய மூன்று உண்மைகளை இக்கட்டுரையில் காண்போம்.

கற்றுக் கொள்ளும் அடையாளமாக இயேசுவின் பாதத்தில் அமர்ந்தாள் (லூக்கா 10:38-42)
இச்சம்பவத்தில் மார்த்தாள், இயேசுவையும் அவருடைய சீடர்களையும் போஷிக்க பற்பல சமையல் வேலைகளைச் செய்து தன்னை வருத்திக் கொண்டிருந்தாள். மற்றும் அனைவருக்கும் எப்படி பரிமாறுவது என்று அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டும் கலங்கினாள். ஆனால் அவள் சகோதரியான மரியாளோ இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய போதனையை கேட்டுக் கொண்டிருந்தாள். இவ்விருவர் செயல்களிலும் எது முக்கியம் என்ற பிரச்சனை எழுந்த போது, இயேசு மரியாளின் செயலை, "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக் கொண்டாள்," என்று மெச்சிக் கொள்ளுகின்றார்.

மரியாள் வாழ்ந்து வந்த காலம், "அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?" என்னும் கூற்றுப் போல, "இறை வார்த்தையை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு தவறான காரியங்களைப் போதிப்பதற்கு சமம்," என்று யூத ரபியான எலியேசர் எழுதி வைத்திருந்த காலமாகும். இந்நிலையில் குருவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக் கொள்ளும் ஆண் சீடர்களுக்கு இணையாக மரியாள் இறையியல் கற்றுக் கொண்டதும் இயேசு அவளை மெச்சிக் கொண்டதும் ஆண்களோடு சேர்த்து பெண்களுக்கும்இறைக் கல்வியின் அவசியத்தை உயர்த்திக் காட்டுகின்றது!

விசுவாசத்தின் அடையாளமாக இயேசுவின் பாதத்தில் விழுந்தாள் (யோவான் 11)
இவ்விரு சகோதரிகளின் சகோதரனான லாசரு மரித்து விட்டான். உடனே  மார்த்தாள் இயேசுவைக் காண ஓடுகின்றாள். மரியோளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். ஆனாலும் மரியாள் இயேசுவின் அழைப்பின் பேரிலே சீக்கிரமாய் எழுந்து அவர் பாதத்தில் விழுகின்றாள். மார்த்தாள் பதறுகின்றாள். "கல்லை எடுத்துப் போடுங்கள்," என்ற இயேசுவிடம், சற்று முன்பு, "ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவக்குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்," என்று விசுவாச அறிக்கையிட்டவளான மார்த்தாள், "நாறுமே, நாலு நாளாயிற்றே" என்று பதறுகின்றாள்.

வாயினால் விசுவாச அறிக்கை செய்த மார்த்தாள் தன்னுடைய பதற்றத்தின் மூலம் அவிசுவாசத்தை வெளிப்பத்தினாள். மரியாளோ "விசுவாசிக்கிறவன் பதறான்," என்னும் வசனத்திற்கு இணங்க பதறவில்லை. "விசுவாசம் கேள்வியினால் வரும். கேள்வி தேவனை அறிகிற அறிவினாலே வரும்" என்னும் வசனத்திற்கு மரியாளின் வாழ்வு சான்றன்றோ? அவள் வசனத்தைக் கேட்டாள். விசுவாசித்தாள். பதறவில்லை. அந்த விசுவாசத்தின் அடையாளமாக இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். மார்த்தாள் விசுவாசத்தை நாவினால் ஒத்துக் கொண்டாள். பிசாசுகளும் தேவன் உண்டென்று விசுவாசித்து நடுங்குவது உண்மையானால், (யாக்கோபு 2:19) வெறுமனே ஒத்துக் கொள்வது விசுவாசமல்ல, மரியாளைப் போல‌ ஒப்படைப்பதே விசுவாசம். அங்கே அற்புதம் நடைப்பெற்றது. இயேசு லாசருவை உயிரோடே எழுப்பினார்.

அன்பின் அடையாளமாக இயேசுவின் பாதத்தை அபிஷேகித்தாள் (யோவான் 12:1‍-8)
மரித்த லாசருவை அற்புதமாக திரும்பப் பெற்ற இக்குடும்பத்தினர் மீண்டும் இயேசுவிற்கு விருந்துக் கொடுத்தனர். மார்த்தாள் வழக்கம் போல சமைக்கவும்,பரிமாறவும் தொடங்கினாள். "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கூறுவாயாக," என்னும் அறிவைப் பெற்றிருந்த மரியாளோ, விருந்தில் உட்கார்ந்திருந்த‌ இயேசுவின் பாதத்தைப் பார்க்கின்றாள். இயேசுவின் மரணத்தையும் அதன் நோக்கத்தையும் அறிந்து வைத்திருந்த மரியாள், ஒரு கணம், அன்பினால் நெகிழ்ந்து, அவர் பாதத்தை அபிஷேகிக்க விரும்பினாள். யூதப் பெண்கள் பொதுவாக‌ கழுத்தில் கட்டி தொஙக வைத்திருக்கும் அந்த விலையுயர்ந்த தைலத்தை அவர் பாதத்தில் பூசினாள். அதை துடைக்க அவள் துண்டை தேடி ஒட வேண்டுமே! அதனால் அவள் தலை மயிரால் அவர் பாதத்தைத் துடைக்க ஆரம்பித்தாள். பல விதமான ஏளனச் சொற்கள் அவ்வமயம் எழுந்தது. இயேசுவோ மரியாளின் செயலைப் பாராட்டுகின்றார். விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூனறிலும் அன்பே பெரியது என்பதை அறிந்த மரியாள் அன்பின் அடையாளமாக இயேசுவின் பாதத்தை அபிஷேகித்தாள்.
சரியான இறை அறிவு, செயல் வடிவிலான விசுவாசத்தையும், அன்பையும் மரியாளில் தூண்டியது. நம் வாழ்வில் இறை அறிவை பெற்றுக் கொள்ளும் அடையாளங்கள் என்ன? விசுவாசத்தின் அடையாளங்கள் என்ன? அன்பின் அடையாளங்கள் என்ன என்பதை சிந்தித்து செயல்பட்டால் சிலுவையில் ஆணிகள் கடாவப்பட்ட இயேசுவின் பாதத்தை நாமும் பரலோகத்தில் நம் நிஜக் கண்களால் கண்டு, வீழ்ந்து, முத்தம் செய்யலாமே!

Wednesday, March 9, 2011

It’s Me!


But As for Me….
It’s me! Who am I? I am not like others. I need not be like others. What do I exist for? What is the purpose of my life?

People of God in the Bible answered to these questions in a firm way saying: “As for me...”
Joshua said: "But if serving the LORD seems undesirable to you, then choose for yourselves this day whom you will serve, whether the gods your forefathers served beyond the river, or the gods of the Amorites, in whose land you are living. But as for me and my household, we will serve the LORD." (Josh 24:15)
Joining with Joshua, I would say, “As for me, I am a Yahweh worshiper and I live to serve Him!”

David said: "But you, O God, will bring down the wicked into the pit of corruption; bloodthirsty and deceitful men will not live out half their days. But as for me, I trust in you," (Ps 55:23) 
He also said: But as for me, I will always have hope; I will praise you more and more.
Joining with David, I would say, “As for me, I would trust and hope in the Lord!” (Ps 71:14) 

Asaph said: "But as for me, it is good to be near God. I have made the Sovereign LORD my refuge; I will tell of all your deeds". (Ps 73:28) He also said: "As for me, I will declare this forever; I will sing praise to the God of Jacob". (Ps 75:9)
Joining with Asaph I would say, “As for me, I would be near to God and praise Him!”

Samuel said: "As for me, far be it from me that I should sin against the LORD by failing to pray for you. And I will teach you the way that is good and right". (1Sam 12:23)
Joining with Samuel I would say, “As for me, I would pray for others!”

Micah said: "But as for me, I am filled with power, with the Spirit of the LORD, and with justice and might, to declare to Jacob his transgression, to Israel his sin". (Mic 3:8)
Joining with Micah I would say, “As for me , I would declare about God!”

Micah also said: "But as for me, I watch in hope for the LORD, I wait for God my Savior; my God will hear me". (Mic 7:7)
Joining with Micah I would also say, “As for me, I would watch and wait for hope!”

I have a unique personality.  I have a unique commitment to a unique God! Every pulse of mine has a purpose! I do not know about others. I cannot say for others.  But I can tell about me. The Bible is teaching me on all of these questions. I am learning. I am growing in His grace.

(Note: I made a search for the verses in the New International Version of the Bible. The Bible is wide as an ocean. Let us look for more pearls in it by exploring other versions of the Bible too!)

Saturday, March 5, 2011

Our Mission Trip


My husband and I went on a mission trip to Kolkata and the Sunderban islands through Charis Seva Mandal (CSM). We had worked in these places for nearly ten years for another organisation. In the mean time life in the city of Bengaluru has made us more complacent and comfortable. But we have been propelled periodically to go to West Bengal, the place where we fell in love with first. We chose to go by a non-AC train, since summer has not shown up seriously yet. The thrill of travelling in "Duronto" (means non-stop) train was awesome!

Sunderban means beautiful forests and beautiful people. And believe me, there is no 'fat' or 'obese' people in these islands. They generally look healthy. Fish is a favourite food for the people in the islands and they get it fresh always. The beauty and un-polluted air in these islands cannot be explained unless you make a visit to these places. These islands are like three to four hours travel from the city.

Travel in the Sunderban islands is a joy if you enjoy the thrill part of it. If you get a cosy seat to sit in a travel, tell, "It's well with my soul." Otherwise a travel in the bus, boat, rickshaw-van...name it anything, it is all by sitting or standing on a log of wood. The travel time to interior places would take nearly an hour or two. The beautiful islands are geographically alienated from the main land by deep water. The water strip when narrow needs a travel by a flat "boat-like" wooden log. But some islands have greater areas of ocean water surrounding them. Travel to those islands is by "ship-like" vessels.

The geographical isolation and the risky travel restrict facilities to the islands. There is no electricity still in many of these places. Not many NGO's or government agencies compete here for the welfare of the islands.

What we did in this trip and what we want to do in the future?

  1. Schools and Hospitals are a big concern in these islands. We visited two schools with nearly similar histories and operation. They exist for nearly two decades serving low-caste children. The veterans who established these schools have invested their earnings and resources into the running of these schools. Now they have run out of resources. Since the children studying in these schools come from poor families, they do not pay any fees. The schools are not able to pay salaries for teachers. They now want to give away their schools, lands and properties to an agency like CSM.
  2. Leading mission agencies in India have generally failed in their missionary work in the Sunderbans. Some have even planted churches and many remain closed today. Our presence in West Bengal for nearly a decade earlier has taught us to prefer training local Bengalis for church planting and further discipling in these regions than cross-cultural missionaries. We have started with BTCP (Bible Training Centre for Pastors) curriculum for this purpose. One should see the curiosity of these people in learning the Bible in a systematic manner! These lay people will be the unpaid pastors who would plant churches and help in discipling the seekers to Christ.

I left the islands with the following questions: Can I be a beacon in the process of helping these schools to grow and prevent them from dying? Can I be a beacon to help churches being planted in the Sunderban islands?
You can be a part of CSM too which presently aims at fulfilling two objectives in the Sunderban islands: Save Our Schools from dying (SOS) -Education Program and Save Our Souls (SOS)- Bengali Training Program
To know more about CSM you may contact in the following e-mail id: charissevamandal@gmail.com.

Jesus said:

 

Tuesday, March 1, 2011

A Bleak Past and A Bright Future



Matthew was inspired by the Holy Spirit to honour five women when he started to write the story of Jesus Christ. Ironically all these women had a dirty or a difficult past. The good news of the genealogy of Jesus is that Jesus was born in a family line which included all these five women  (Matthew 1). A brief glance of the five from the Old Testament would help all today who aspire a bright future wanting to erase a bleak past.

Tamar
Tamar was the widow of the first son of Judah, Er.  Judah's next son Onan cheated Tamar and he also died. The deaths were the judgement of God on these two men. The third son, Shelah did not want to marry Tamar. Judah also became a widower by that time. Tamar though upset somehow wanted to get a child for the family line of Judah to go on. In some tricky incident which followed, Judah unknowingly found himself in an adulterous relationship with Tamar, his own daughter-in-law. But Tamar knew who she was into relationship. In an interesting turn of events, Judah came to know that Tamar got to become pregnant because of him. He also realized that Tamar was more righteous than him because he failed to give his third son to her. The story gives a clear message that one cannot try to achieve a seemingly worthy goal by disobeying God like Tamar. She used unethical short-cuts.  But the story also ends with a good note that Judah never did that mistake once again. Tamar on her part continued to remain a widow (Genesis 38).
A bleak past gets erased when we do not repeat the past mistake again however dirty it may be. Jesus forgave the sins of a woman caught in adultery. He said to her, “Sin no more” (John 8:11). Tamar who did not sin any more got her entry into the historic genealogical list of Jesus.

Rahab
Rahab was a prostitute living in the city of Jericho.   But she was also a wise woman who knew what was happening in the world of her time. Rahab was update with information about the mighty deliverance of the bonded Israelite slaves from the then super power Egypt and the subsequent miracles and victories this wandering group enjoyed from the super powerful Yahweh God all along their journey. She knew kings subdued by the Israelites by names. She could also predict how the rulers of Jericho would melt in fear in front of these feeble yet powerful Israelites. No wonder, Rahab welcomed the Israelite spies with peace (Hebrews 11:31).  The spies told her a way by which she and her family would not perish during the attack. As a woman who already knew the power of the Yahweh God, she obeyed the spies. Faith comes through hearing.  She and her family were the only survivors of the attack in the city of Jericho.  Rahab married Salmon, a Yahweh worshipper in the Israelite community thereafter. (Joshua 2 & 6)
A bleak past gets erased when we obey to the counsel which gives a solution or an “exit” for the trouble we are caught up with. It is then the old dirty episode reverses to a glorious history. Rahab found her place in the genealogy of Jesus. Jesus said that He is the Way who can take us out from perishing. For God so loved the world that he gave his only son Jesus that whoever believes in Him shall not perish but have eternal life.

Ruth
It is easy for anyone to interpret three widows living under the same roof as a result of evil done in their past. With no men in the family there was utter hopelessness in this household.  Now one of those widows was Ruth who came from a non-Yahweh background. Her difficult choice to stick to her seemingly hopeless old widowed mother-in-law, Naomi and her Yahweh God, unlike the other widow brought all the change! A rich man named Boaz, who was a relative of her deceased husband married Ruth. Hopelessness turned to hope.
A bleak past is erased when a difficult choice is made with regard to a faith commitment with a God who would in turn show new beginnings to overcome a difficult past. Ruth became the great grandmother of King David in whose family line was Jesus born.

Bathsheba
Bathsheba was an innocent victim of the lust of the powerful king David. In this lustful pursuit of the king, she lost her husband and also became a joint sinner in this episode. She also lost the son born out of adultery.  The counsel of God came to David that he was a sinner. A good thing about this king however was that he accepted that he was a sinner (2 Samuel chapters 11 and 12). It may not be wrong on our part to imagine Bathsheba with joint hands with David hearing him cry out the psalm of confession (Psalm 51). Just as she was a joint sinner, no wonder, she jointly made her confession to the Lord.
A sinful past is cleared with a genuine confession to God. Proverbs 28:13says that, people who conceal their sins will not prosper, but if they confess and turn from them, they will receive mercy.

Mary
Mary was about to be divorced from her husband Joseph for he found her to be a unwed mother (Matthew 1:19). Mary had to carry the tag of an unwed mother just because she obeyed the word of God given to her through an angel. As a virgin she became pregnant with Jesus in her womb, through the work of the Holy Spirit. Since she had surrendered herself as a servant to this holy task, she became the honourable mother of Jesus incarnate. Joseph too on his part obeyed the word of God later. He accepted pregnant Mary and took care of her.
Obedience to the word of God gives an immediate relief from a sinful tag. It brings honour and fame and eliminates undesired tags in our lives. God provides the needed help from people close to us to clear us away from the dirt tag.

To ALTER a bleak past, I need to offer myself at the ALTAR of a God who is capable of clearing it. Jesus has the power to forgive a sinner because he has paid the penalty of a sinner by offering himself as a sinless sacrifice on the cross. The power of his resurrection gives people with a dirty past, clearance from that and a hope for this world and the world to come. Who will not want to come out of a dirty and difficult past and look forward to a glorious, guiltless future?