Friday, June 17, 2011

சுந்தரவனக் காடுகள் இயேசுவுக்காக!



சுந்தரவனக் காடுகள் இந்திய தேசத்தில் மேற்கு வங்காளத்தில் கங்கை நதிவங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்திலுள்ள தீவுகளில் அமைந்துள்ளது. சுந்தரவனம் என்றால் அழகான காடுகள் என்று அர்த்தம். இங்கு மொத்தம் 54 தீவுகள் உள்ளன. இத்தீவுகளின் ஆரம்ப எல்லைகள், கல்கத்தா பட்டணத்திலிருந்து ஏறத்தாழ நான்கு மணி நேர‌, பிரயாணத் தூரத்தில் உள்ளன. அங்கிருந்து தீவுகளுக்கு படகுகள், பரிசல்கள் மூலம் செல்லலாம். மேலும் பொதுவாக மக்கள் அங்கு நீண்ட தூரத்திற்கும் படத்தில் உள்ளது போன்ற‌ மூன்று சக்கர வண்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.
கஷ்டமான பிரயாணம் காரணமாக, அரசாங்கமோ, தொண்டு நிறுவனங்களோ சுந்தரவனத்தின் உட்காடுகளில் அடிப்படை வசதிகளான மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை செய்து தரவில்லை. 'ஹைலா சூறாவளி' போன்ற இயற்கையின் சீற்றங்களினால் இத்தீவுகள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றது. புலி மற்றும் முதலைகளின் தாக்குதலால் மனிதர் மடிவது சில தீவுகளில் சகஜமானதாகும். இப்படிப்பட்ட பல காரணங்களால் மிஷனெரி நிறுவனங்களும் உட்காடுகளுக்கு செல்ல தயக்கப்படுகின்றன. கேரிஸ் சேவா மண்டல் என்னும்  மிஷனெரி நிறுவனம் தேவையுள்ள இப்படிப்பட்ட உட்ப‌குதிகளில் தான் பணி செய்து வருகின்றது.

கேரிஸ் சேவா மண்டலத்தின் தற்போதையப் பணிகள்

 கேரிஸ் தலைமைத்துவ சிறப்பு பயிற்சி நிலையம்
பத்தாண்டுகள் மேற்கு வங்காளத்தில் முன்பு ஊழியம் செய்த அனுபவத்தின் அடிப்படையில், உள்ளூர் ஊழியர்களை உருவாக்குவதே சுந்தரவனத்தில் சிறப்பான முடிவுகளைத் தரும் என்று நம்புகிறோம். எனவே கேரிஸ் தலைமைத்துவ சிறப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் தற்போது புதிய விசுவாசிகளை, நானும், எனது கணவர் பாஸ்டர் சுரேஸ் ராஜனும், மற்றும் கல்கத்தாவை சேர்ந்த பாஸ்டர் நோயல் பிரபுராஜுமாக சேர்ந்து, முப்பது பேருக்கு, மாதம் ஒரு முறை மூன்று முழுமையான நாட்கள் பயிற்சி என்ற வீதத்தில் பயிற்றுவித்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் பழைய ஏற்பாட்டில் ஒரு புத்தகமும், புதிய ஏற்பாட்டில் ஒரு புத்தகமுமாக இரண்டு புத்தகங்களில் வினாடி‍வினா போட்டிக்காக இவர்கள் ஆர்வமுடன் ஆயத்தமாகின்றனர். இவர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்ளும் வாஞ்சையானது வேதத்தில் பெரோயாப் பட்டணத்தாருக்கு இணையானதாகும் (அப்போஸ்தலர் 17:11). இவர்களில் பலர் ஏற்கனவே இல்லத் திருச்சபைகளை நடத்துபவர்கள் ஆவர். 

கேரிஸ் பள்ளிகள் 
தலித் மக்கள் அதிகம் உள்ள  மிகவும் பிற்பட்ட கிராமங்களில் நலிவுற்ற நிலையில் இருக்கும் பள்ளிகளை தத்து எடுக்கும் பணியையும் கேரிஸ் செய்து வருகின்றது. சம்பளம் ஏதுமின்றி பணி செய்யும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது, பாழடைந்த பள்ளி கட்டிடங்களை சீர்படுத்துவது என்று செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.

கேரிஸ் திருச்சபைகள்

தற்போது மூன்று இடங்களில் விசுவாசிகள் வீட்டுத் திண்ணைகளிலும், மரத்தடிகளிலும் இருந்து ஆராதனை செய்து வருகின்றனர். கிறிஸ்துவின் மீதுள்ள அன்பின் காரணமாக இம்மூன்று இடங்களிலும் விசுவாசிகள் தங்கள் நிலங்களை ஆலயக் கட்டுமானப் பணிக்காக கொடுத்திருக்கிருக்கிறார்கள். வசதியற்ற வீடுகளில் வாழும் இவர்களுக்கு வசதியான ஆலயக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது நம் வாஞ்சையாகும்.

சுந்தரவனக் காடுகளை இயேசுவுக்கு சொந்தமாக்கும் பணியில் நீங்களும்  எங்களுடன் கைகோர்க்கலாம்!
1. மேற்சொன்ன மூன்று பணிகளுக்காகவும் தினமும் ஜெபியுங்கள்.
2. எங்களோடு இப்பணித்தளங்களுக்குப் பயணம் செய்து இப்பணியை ஊக்குவியுங்கள்.
3. மாதந்தோறும் உதாரத்துவமாக காணிக்கைத் தந்து இந்த ஊழியங்களைத் தாங்குங்கள்.
மேலும் விவரங்களுக்கு, graceidarjan@yahoo.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்!



No comments:

Post a Comment