Sunday, April 1, 2012

என் ஜெபப் பங்காளர் யார்?


93 வயதான ஒரு அமெரிக்க நண்பரிடம்,எனக்கு மிகவும்பிடித்தது, "உங்களுக்காக நான் தினமும் பல முறை ஜெபிக்கிறேன்," என்பதாகும். வேதக் கட்டளையின்படி நான் ஆண்டவரோடு அடிக்கடி பேச வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தாலும், மற்றவர்கள் எனக்காக ஜெபிப்பது எனக்கப் பிரியமான‌ ஒன்றாகும்ஆனால்,யார் எனக்கு சரியான ஜெபப்பங்காளராக இருக்க முடியும் என்பதுகுறித்துநான்செய்த வேத ஆராய்ச்சியில் கற்றுக் கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,

இயேசுசிறு பிள்ளைகளுக்காக ஜெபித்தது
ஒரு சமயம் ஜனங்கள், இயேசு தங்களுடைய சிறு பிள்ளைகள் மீது கரத்தை வைத்து ஆசீர்வதிது ஜெபிக்க வேண்டும் என்று விரும்பினர். சீடர்கள் அதை தடுத்தனர். இயேசுவோ சிறு பிள்ளைகள் பரலோக ராஜ்ஜியத்தின் பிரஜைகள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார் (மத்தேயு 19:13-15). சிறு பிள்ளைகளுக்கான தேவதூதர் எப்பொழுதும் பரலோகத்திலுள்ள பிதாவை தரிசிக்கின்றனர் என்று இயேசுவே கூறியுள்ளார் (மத்தேயு 18:10). சிறு பிள்ளைகளுக்காக அக்கறை கொள்ளுகிறவரும், ஜெபித்து ஆசீர்வதிப்பவரும் யார் என்றும் தெரிந்து கொண்டோம்.

இயேசு பேதுருவுக்காக ஜெபித்தது
இயேசுவுக்கு வயதில் மூத்தவர்களும் பிள்ளைகளே ஆவர். அவர்களுக்காகவும் அவர் ஜெபிக்கிறார். அவர் சிலுவையில் அறையப்படுமுன்னர் உள்ள கடைசி நாட்களில் நடந்த சம்பவம் ஒன்றை லூக்கா 22ம் அதிகாரம் வர்ணிக்கின்றது. இவ்வதிகாரத்தில் சாத்தான் எப்படி வெற்றிகரமாக யூதாஸ் காரியத்துக்குள்ளாக நுழைந்தான் என்று காண்கிறோம். இயேசு, யூதாஸை இழந்த துயரத்தில் இருக்கும் போது தான் இந்த சம்பவம் நடைபெறுகின்றது. தனக்கு அருகிலேயே எப்பொழுதும் இருந்த பேதுருவையும் சாத்தான் சுளகினால் புடைக்க உத்தரவு பெற்றதை அறிந்த இயேசு அவனையும் இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் அவனுடைய விசுவாசம் ஒழிந்து போகாமல் இருக்க ஜெபிப்பதாக அவனிடம் கூறினார். பேதுரு தன்னை சாத்தான் சுளகினால் புடைத்த சம்பவத்தை நினைவில் கொண்டவனாக தன்னுடைய நிருபத்தில் சாத்தான் கெர்ச்சிக்கின்ற சிங்கம் போல எவனை விழுங்கலாம் என்று சுற்றித் திரிவதாக கூறுகின்றான் (1 பேதுரு 5:8).

இயேசு ஒவ்வொருவரையும் நேசிக்கின்றார். அவர்களுக்காக ஜெபிக்கின்றார் என்று நாம் அறிய வேண்டும். ஆனாலும் தனக்குள்ள பொறுப்பிலிருந்து யூதாஸ் தவறி விட்டான். பேதுருவோ சாத்தான் அவனை புடைத்ததால் இயேசுவை மூன்று முறை மறுதலித்தாலும் உடனே தான் செய்த தவறுக்காக கதறி அழுதான்.

இயேசு சீடர்களுக்காக ஜெபித்தது
யோவான் 17ம் அதிகாரத்தில் இயேசு அன்று முதல் இன்று வரையிலான தன்னுடைய சீடர்களுக்காக செய்த நீண்ட ஜெபம் ஒன்றை காண்கின்றோம். 14ம் அதிகாரத்திலிருந்தே சீடர்களிடம் தன்னுடைய பிரிவைக் குறித்து சொன்னதால் கலங்கி போயிருந்த அவர்களுக்கு அந்த ஜெபம் இதமானதாக இருந்திருக்க வேண்டும். அதில் அவர் முக்கியமாக ஜெபிப்பது அவர்தம் சீடருக்கு பொல்லாத சாத்தானிடமிருந்து பாதுகாப்பு, அவர்களுடைய பரிசுத்த வாழ்வு, மற்றும் ஒற்றுமையான வாழ்க்கையாகும்.

இயேசு எனக்காக ஜெபிக்கிறார்
 எலியாவைப் போன்ற நீதிமான்களின் ஜெபத்தை ஆண்டவர் கேட்கின்றார் (யாக்கோபு 5:16). நோய்களிலிருந்து குணம் பெற, நம்மால் ஜெபிக்க முடியாத நேரங்களில், நாம் சபையில் உள்ள மூப்பரை அழைத்து ஜெபிக்க யாக்கோபு ஆலோசனைத் தருகின்றார். இரண்டு, மூன்று பேர் சேர்ந்து ஜெபிக்கும் போது அது வல்லமையான ஜெபம் என்றும் வேதம் கூறுகின்றது.

ஆனால், இப்பூமியிலுள்ள நீதிமான்கள் யாரைக் காட்டிலும் இயேசு வே பரிசுத்தமும் நீதியுமுள்ள ஆசாரியர். அவரே நமக்காக எப்பொழுதும் பரலோகத்தில் வேண்டுதல் செய்கிறர்(எபிரேயர் 7:25, ரோமர் 8:34). எல்லாவற்றிற்கும் மேலான உண்மை என்னவென்றால், நாம் வேண்டிக் கொள்வது இன்னதென்று அறியாத வேளைகளில் ஆவியானவர் நமக்காக வாக்குக்கு அடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார் என்பதாகும் (ரோமர் 8:26-27). இந்த ஜெப விண்ணப்பங்கள் நாம் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்று யோவான் கூறுகின்றார் (1 யோவான் 2:1).

நாம் எப்பொழுதும் ஜெபிப்பவர்களாக, பொறுப்பான பிள்ளைகளாக வாழ வேண்டும். நாம் மகிழிந்து களிகூற வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் இயேசுவின் விலை மதிப்பில்லாத இரத்தத்தால் மூடப்பட்டவர்கள் என்பதாகும். கல்வாரியில் நம்முடைய பாவங்களுக்காக அவர் சிந்தின இரத்தமே இயேசுவை யாரைக் காட்டிலும் எட்டாதஉயரத்தில் வைத்துள்ளது. பரிசுத்த மான‌ இந்த ஆசாரியரை என் ஜெப பங்காளராக வைத்திருப்பது சரி தானே!

No comments:

Post a Comment